Sunday, January 23, 2022

இதையும் படிங்க

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று!

புதுடெல்லி:குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் வீட்டிலேயே...

திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் ஞாபகார்த்த நிகழ்வு நாளை!

அதன் படி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்தியாவின் சிறந்த தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு தேர்வு!

புது டெல்லி: மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும்...

ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி -நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது!

ராஜபக்ஷக்களிடத்தில் இனியும் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது என்று குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் தேடுதல் வேட்டை | ஆவணங்களற்ற 32 புலம்பெயர்ந்தோர் கைது

மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள Putatan பகுதியில் மலேசிய குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் ஆவணங்களற்ற 32 புலம்பெயர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோரிக்கைகளை முன்வைப்பது மட்டும் அரசியல் அல்ல | நிலாந்தன்

நாட்டில் செயற்கை உர இறக்குமதி நிறுத்தப்பட்டதால் பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் திருமணம்,பிறந்தநாள் போன்ற சுபகாரியங்களில் வழங்குவதற்கு பூச்செண்டுகளுக்கு தட்டுப்பாடு.மரண வீடுகளில் வைப்பதற்கு மலர்...

ஆசிரியர்

கொவிட்டுக்குப் பின்னரான பாடசாலைக்கல்வி எதிர் கொண்டுவரும் சவால்கள் | இராமச்சந்திரன் நிர்மலன்

அண்மைய காலங்களில் கொவிட் பெரும் தொற்று காரணமாக வேலை இழப்பு பொருளாதாரச்சரிவு சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகள் என்ற வேறுபாடுகளின்றி பாதித்து வருகின்றது. இவற்றினால் மிகவும் எளிதாகப் பலியிடப்படுவது குழந்தைகளின் கல்வி தான் இன்று உலகம் முழுவதும் சிறுவர்கள் கல்வி வாய்ப்புக்களுக்காக ஏங்கித் தவிர்கின்றனர். அதுவும் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாண மாணவர்களின் நிலை பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாகவே உள்ளது. பல தசாப்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து வரும் கல்வித்துறையானது கொவிட் பெரும் தொற்றினால் மீண்டும் அதிபாதாளத்துக்கு சென்று விடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் எழாமல் இல்லை. 

 கொவிட் பெரும் தொற்று காரணமாக அண்மைய காலங்களில் மூன்று நான்கு மாதங்களே பாடசாலை நடைபெற்றது. விரைவில் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான ஏது நிலைகளும் தென்படவில்லை. ஏனைய காலங்களுக்கான பாடத்திட்டத்தினை மாணவர்கள் எவ்வாறு பெற்றுக் கொள்ளப் போகின்றார்கள் அல்லது மாணவர்களுக்கு எவ்வாறு பெற்றுக் குடுக்கப் போகின்றோம் என்பது வினாவாகும்.உதாரணமாக 2020 ஆம் ஆண்டு தரம் ஒன்றில் இணைக்கப்பட்ட மாணவன் ஒருவனை எடுத்தால் நான்கு மாதங்களே பாடசாலையில் கல்வி பயின்றான் இன்று 2021 ஆண்டில் தரம் இரண்டில் கற்கின்றான் இந்த வருடமும் மூன்று மாதங்களே கற்றல் கற்பித்தல் செயற்பாடு நடைபெற்றது. இவ்வாறான மாணவர்கள் தரம் ஒன்றில் பாடசாலைக் கலைத்திட்டத்திலுள்ள அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் முடிக்கப்படாமல் இன்று இரண்டாம் வகுப்பில் உள்ளார்கள் இவர்கள் இரண்டாம் வகுப்புக்குரிய அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகள் முடிக்கப்படாமல் மூன்றாம் வகுப்புக்கு செல்லப் போகின்றார்கள். இன்றைய பெற்றோருக்கான பரீட்சையான புலமை பரிசில் பரீட்சைக் காண ஆயத்தங்களையும் தயார்படுத்தல்களையும் மூன்றாம் வகுப்பிலேயே ஆரம்பித்து அந்த வகுப்பிலுள்ள திறமையான அல்லது பொருளாதார வசதியுடைய கற்றல் பின்புலமுள்ள மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளி பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்துக்கும் பெருமை சேர்பதற்கு தயார்படுத்தப்படப் போகின்றார்கள். இந் நிலையில் வீட்டில் கற்றல் பின்புலம் இல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலுள்ள மாணவர்கள் ஆரம்ப பிரிவுக்கான அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளை அடையாமல் எழுத வாசிப்பதிலும் எண்களை கூட்டல் கழிப்பதிலும் இடர்பட்டு தொடர்சியாக வகுப்பு ஏற்றப்பட்டு அனைத்து பாடங்களிலும் சித்தியடையாத மாணவர்களாக கற்றலை விட்டு இடைவிலகப் போகின்றார்கள். அவர்கள் பற்றி கல்வி நிர்வாகிகள் சிந்திப்பதே இல்லை. மூன்றாம் வகுப்பில் உள்ள அனைவரும் எழுத வாசிக்க தெரியாதவர்கள் இல்லை  என்ற நிலையை கல்வி நிர்வாகிகள் உறுதிப்படுத்தும் வரை வட கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்நிலை வகிக்கப் போவதில்லை. இவ்வாறான நிலை காணப்படும் போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் விழுந்து விட்டது சரிந்து விட்டது என்று கூப்பாடு போட்டு பயனில்லை. எனவே இவற்றிலிருந்து மீண்டு வர என்ன செய்யப் போகின்றோம் என சிந்திப்பது அவசியமாகும். 

 எமது அயல் நாடான இந்தியாவில் தமிழ்நாட்டில் இவ்வாறான அழுத்தங்களை குறைக்க கடந்த வருடத்தை  éச்சிய கல்வி ஆண்டாக அறிவித்தார்கள் பரீட்சைகள் எல்வாவற்றையும் கை விட்டு அதற்கு முன் வகுப்புக்களில் பெற்ற புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு கல்Âரிகளுக்கு தெரிவு செய்யப்பட்டனர் முடிக்கப்படாத அலகுகளை எவ்வாறு éர்த்தி செய்வது என்று சுற்றுநிரூபங்கள் வெளிவிடப்பட்டன. இவ்வாறான சுழலிலும் மாணவரை மதிப்பிடும் அணுகுமுறையில் மாற்றம் எடுப்படுத்த நாம் முனையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.  தரம் 5 புலமை பரிசில் பரீட்சையினை கைவிட்டு தொடர் மதிப்பீடு மாணவர் சுயவிபரக்கோவை என்பவற்றிÇடு மாணவர்களை மதிப்பிட்டு வறிய மாணவர்களுக்கு புலமை பரிசில்களையும் வசதியுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களையும் அரசு ஏற்படுத்த வேண்டும். இச் சுழலில் பல மாணவர்களின் குடும்பங்கள் தனிமை படுத்தப்பட்டும் பல சிறுவர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டும் பல மாணவர்களின் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியுமாக அழுத்தத்தில் இருக்கையில் பரீட்சைகள் நடாத்தி அவர்களுக்கு மேலும் அழுத்தங்களை வழங்குதல் ஒரு வன்முறை ஆகும். பரீட்சைகளை இரத்து செய்து நவீன மதிப்பீட்டு அணுகுமுறைகளினுள் நாடு செல்ல வேண்டிய காலம் தற்போது தான் கனிந்துள்ளது. இதனை அரசு சாதகமாக நோக்க வேண்டும். பரீட்சைகளை இரத்து செய்து ஆரம்ப பிரிவு மாணவர்கள் அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளை அடைவதை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர்களும் ஆசிரிய ஆலேசகர்களும் மேற் கொள்ள வேண்டும். அதை எவ்வாறு செய்யப் போகின்றோம் என்பதே இங்குள்ள கேள்வியாகும் இதற்கு மத்திய மாகாண கல்வியமைச்சுக்கள் என்ன திட்டங்களை வைத்திருக்கிறது? ஏற்கனவே ஒரு வருடம் முழுவதுமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் பழைய முறையிலான கற்பித்தலே தொடருமாயின், அது எந்த அளவிற்கு பலன் அளிக்கும்? எங்களுடைய  கற்பித்தல் மற்றும் பரீட்சை முறைகளில் ஏன் மாற்றம் செய்யக் கூடாது?  

இந்த ஒரு வருட காலத்திலாவது எங்களுடைய கல்வியியலாளர்களும் கல்வி நிர்வாகிகளும் கற்றல் என்பதையும் கற்பித்தல் என்பதையும் சிறிய தொலைபேசியில் அடைய முடியாது என்பதனை புரிந்து கொள்ள முடியவில்லையா? தற்போது கல்வி நிர்வாகிகள் கற்றல் என்பதை இணையம் வழியாக பாடம் நடத்துதலையும் பரீட்சை நடாத்துதலையும் மட்டுமே கல்வியாக எண்ணி செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது எவ் மாதிரியான விளைவை ஏற்படுத்த போகின்றது என்பதனை வருகின்ற காலம் பதில் சொல்ல வேண்டும். 

இவ் நிலையில் டெல்டா தொற்று பரவலால் பாடசாலைகளை தொடர்ந்தும்  திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இவ்நிலையில் மாற்று கல்வி நுட்பமாக இணையவழிக் கற்பித்தலை கல்வி நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர் கற்பித்தல் கோட்பாடுகளுக்கு  உட்படாத இணைய வழி   வகுப்புறைகளால்   பாகுபாடுகள்  உருவாகும் என்பதால் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இணைய வகுப்புகளால் ஏராளமான பிரச்சனைகள் இணைய வகுப்புகளை நடத்துவதிலும் ஏராளமான சிக்கல்கள். இணைய இணைப்பு, கருவிகள், போதிய பயிற்சியின்மை, மிகக் குறைந்த கற்றல் என இன்னும் நிறைய  பிரச்சினைகளை அடுக்கலாம். 

இது இவ்வாறு இருக்க இன்றைய சூழலை அவதானிக்கின்ற போது வசதியுடைய மேல்தட்டு வர்க்க மாணவர்களுக்கு தான் கல்வியா? அவர்கள் சார்பாகவா கல்வி திட்டமிடப்பட வேண்டும்? என்னும் வினாக்கள் எழாமல் இருக்க முடியாது. இன்றைய கல்வி நிர்வாகிகள் மேல்தட்டு மனநிலையில் மட்டும் சிந்திப்பது கவலை தரும் விடயம் ஆகும் நகர பாடசாலைகளை மட்டும் சிந்தித்து இணையவழி பரீட்சைகளையும் திட்டமிடும் கல்வி நிர்வாகிகள் கரப்புக்குத்தி கருங்காலிக்குளம்  பட்டிக்குடியிருப்பு போன்ற பிரதேச மாணவர்கள் நிலை பற்றி சற்று சிந்தித்ததுண்டா? அங்குள்ள பொருளாதார பின்னனிகளை அறிவார்களா? இணைய வசதிகளை அறிவார்களா? ஏன் அந்த ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது என்பதை ஆவது அறிவார்களா? அந்த மாணவர்களுக்கு இதனால் ஏற்படும் உள அழுத்தங்கள் தொடர்பாக ஆவது சிந்திப்பார்களா? 

பின்லாந்தில் இணையவழிக் கல்வியுள்ளது. மேற்கத்திய நாடுகளிலுள்ளது இணையவழிக் கல்வியுள்ளது ஏன் இங்கு நடைமுறைப்படுத்த கூடாது என்கின்றனர் முதலில் ஒவ்வொரு நாடும் தனித்தன்மை வாய்ந்தது அந்த அந்த நாடுகளின் பொருளாதார சமூக சூழலைப் பொறுத்துதான் இந்த அந்த நாடுகளின் கல்விக் கொள்கைகளையும் கல்வி நடைமுறைகளையும் தீர்மானிக்கபட வேண்டும். என்பதனை கல்வி நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எவ்வாறு இருந்போதும் இன்று அரசு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இணைய வழிகல்வி சிறப்பாக நடைபெறுவதாக பத்திரிகையாளர் சந்திப்புக்களில் தம்பட்டம் அடிக்கின்றது. அரசு கொழும்பில் இருந்து அவ்வாறு செல்வதற்கு காரணம் மாகாணங்களிலுள்ள அதிகாரிகளே தமது நலன்களுக்காக வட கிழக்கு மாணவர்களின் உண்மை நிலையை மறைத்து அரசு “எள் என்கின்ற போது எண்ணெய்” ஆக தாங்கள் இருப்பதாகக் காட்டி தமது நலன்களை அடைய முனைகின்றார்கள். உண்மையில் தமது மாகாண மாணவர்களின் உண்மை நிலையை கூறி மாணவர்க்கு மாற்று கல்வி வழிமுறைகளை முன்வைத்து அரசிடமிருந்து நிதி மூலங்களை பெற்று மாற்று கல்வி செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டியவர்கள் தமது கடமையை தவறவிட்டமை கவலைக்குரிய விடயமாகும்.  இவ்நிலையில் இணைய வழி கல்வியினை முழுமையாக செயல்படுத்த இயலாத  கிராமப்புற மாணவர்களுக்கு என்ன செய்வது? நகர்புற பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு என்ன செய்வது? அவர்களை கல்வியுடன் தொடர்புபடுத்தி வைத்திருக்க வேண்டாமா? கிராமங்களில் பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு இணைய வழிக்கல்வி சாத்தியம் இல்லை நகர்புறங்களிலும் இணைய வகுப்புகளில் பிரச்சினைகள் உள்ளன. பல மாணவர்களை ஒரு இடத்தில் இணைத்தலும் சாத்தியம் இல்லை . அவ்வாறு எனின் என்ன செய்வது?

இந் நிலையில் இந்தியாவில் இக் காலத்துக்கு ஏற்ப மாற்றுக் கல்விச் சிந்தனைககளுடன் சில கிராமங்களில் அரச சார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் நடைமுறைப் படுத்திய நுண்வகுப்பறை திட்டம் அங்கு பெரு வெற்றியை தந்து இருக்கின்றது இந்தியாவில் கொவிட் கோர தாண்டவம் ஆடிய போதும்  கிராமங்களில் நுண் வகுப்பறை திட்டம் மிகவும் பயனளித்து இருக்கின்றது அவர்கள் செயற்படுத்திய நுண்வகுப்பறைகள் என்றால் என்ன?

பாடசாலைகள் இயங்க முடியாத போது அந்த வகுப்பறைகளை மாணவர்கள் வசிக்கும் வீதிகளுக்கே  கொண்டு சென்று  வீதியில் இருக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லல் அதுவே நுண்வகுப்பறைகள். நுண்வகுப்பறைகள் சிறியவை. இரண்டு முதல் ஐந்து மாணவர்களையும்  ஓர் தன்னார்வலரையும் அல்லது ஆசிரியரைக் கொண்டது . வேறு வேறு வயது என்றாலும் கற்றல் நடைபெறும் இயற்கைவாதியான  ரூசோ கூறியது போல் குழந்தைகளுக்கு இயற்கையுடன் இணைந்தகல்வி 

இங்கு அவர்கள் இது பாடபுத்தகத்தை அடிப்படையாக இல்லாமல், சில கற்றல் அடைவுகளை சில செயற்பாடுகள் மூலமும் உரையாடல் மூலமும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல் மாணவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே ஒன்று முதல் ஐந்து மாணவர்கள் எண்ணிக்கையில் வகுப்பினை தன்னார்வலர்களைக் கொண்டு நடத்துதல். கிராமப்புறங்களில் மாணவர்களுக்கு போதிய போசாக்கு தட்டுப்பாடுகளை தவிர்பதற்கு முன்னர் பாடசாலையில் நடைபெற்ற மதிய உணவு திட்டத்தையும்  இந்த மையங்களில் மாணவர்களுக்கு வழங்கிடலாம்.

இந்த வகுப்பறைகளை கிராமங்கள் நகரங்களிலுள்ள பொது நோக்கு மண்டபம் சனமூகநலையங்கள் அறநெறிப்பாடசாலைகள் ஆலயங்களில் சுகாதாரப்பாதுகாப்புடன் சமூக இடைவெளியுடனும் நடாத்தலாம் நுண்வகுப்பு ஆசிரியர்களாக  அப்பகுதியில் வசிக்கும் பட்டதாரிகள் , ஆசிரியர்கள், ஓய்வு பெற்றஆசிரியர்கள்;, படிப்பறிவு இருக்கும் குடும்பத்தலைவிகள் உட்பட பாடசாலைகளின் பழைய மாணவர்களைப் பயன்படுத்தலாம் பங்கேற்கும் மாணவர்கள்   1-5 வகுப்பு ஒரு பிரிவு  6,7,8,9 வகுப்பு ஒரு பிரிவு  10,11  வகுப்பு ஒரு பிரிவு 12,13 வகுப்பு ஒரு பிரிவு என்றவாறு  மாணவர்களை வகைப்படுத்தலாம்.

இந்த நுண்வகுப்பறைகள் மூலம் ஆரம்ப பிரிவு மாணவர்களின் அத்தியவசிய கற்றல் தேர்ச்சிகள் உதாரணப்படுத்தப்பட்டு எழுத வாசிக்க கூட்ட கழிக்க தெரியாத மாணவர்கள் இல்லை என்ற நிலைப்பாட்டை அப் பிரிவுக்குரிய வலய கல்வி அலுவலக ஆரம்ப பிரிவு உதவிகல்விப் பணிப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் 

ஏனைய வகுப்பு பிரிவினருக்கு நுண்வகுப்பறைகளில் கல்வியமைச்சின் அனுசரணையுடனாக கல்வித் தொலைக்காட்சிகள் அல்லது தனியார் கல்வித் தொலைகாட்சிகளுடனான கல்வி நிகழ்சிகளை ஒளிப்புதல் அவை தொடர்பான மாணவர் கலந்துரையாடல்கள் மேற் கொண்டு அதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைத்தல் வாரம் ஒரு முறை பாடங்களில் மாணவர்களின் நிலை தொடர்பாக செயற்பாடுகள் மூலம் மதிப்பிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு மாணவர்நிலைகளை மேம்படுத்துதல வேண்டும். 

பாடசாலைகள்; திறந்தாலும் முழுமையாக அவை இயங்காது. அப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த நுண்வகுப்புகள் தொடரலாம். இவற்றை அரசுடன் முழு ஒத்துழைப்புடன் செயல்படுத்துவதே சிறந்தது. ஆனால் அரசால் மட்டும் செய்திடவும் முடியாது. தன்னார்வ அமைப்புகள் இதில் கைகோர்க்க வேண்டும். இவற்றை கண்காணிக்கும் பொறிமுறையையும் உருவாக்க வேண்டும் கிராம மட்டக் கல்விக்குழுக்கள் உருவாக்கபட வேண்டும்  அல்லாது விடின் கிராமங்களில் பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகிவிடும். ஏன் இவ்வாறு இந்தியாவின் தமிழ் நாட்டு கிராமங்களில் தன்னார்வலர்களோடு இணைந்து உள்ளுர் கல்வித்துறையினர் உருவாக்கிய முற்போக்கான  திட்டங்கள் போல் எமது நாட்டுக்கு பொருத்தமான திட்டங்களை தயாரிக்க எமது கல்வியாளர்களால் முடியவில்லை ?.

அண்மையில் இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட இணைய வசதியற்ற மாணவர்களுக்கான  கற்றல் மத்திய நிலையங்கள் எனும் திட்டம் சிறப்பான திட்டமாகும் ஆனால் அவை பாடாலைகளை அடிப்படையாக அல்லாமல் கிராமங்களை அடிப்படையாகவும் மாற்றமடைய வேண்டும் அதற்கான கற்றல் வளங்கள் போதுமானவையாக இல்லை கற்றல் மத்திய நிலையங்களை தெரிவு செய்வதிலும் அரசியல் செல்வாக்குகள் பயன்படுத்தபட்டுள்ளன. அவற்றை முகாமை செய்வதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன கண்கணிப்பு பொறிமுறைகளும் சிறப்பாக இல்லை இவை மேம்படுத்தப்பட வேண்டும்.

இப்போது கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் கல்வியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் இணைய வழிக்கல்வியை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் ஈடுபடவேண்டும் என்கின்றனர் இணையக்கல்வியை முன் கொண்டு செல்ல வேண்டும் என்றால்  பாடசாலைகள் நவீனத் தொழில்நுட்பங்களிலிருந்து விலகியிருக்க முடியாது. தொடர்சியான இணையத் தொடர்பு வசதியுடன் பாடசாலைகள்  அத்துடன் எல்லாக் மாணவர்களுக்கும் நவீன மடிக்கணினி, விலையின்றி வழங்கப்பட்டாக வேண்டும் இவ்வாறான முற்போக்கான  ஏற்பாடு ஒன்று நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னேடுக்கப்பட்டு கைவிடப்பட்டது அப்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பின் வேறுவழி இன்றி எந்த கற்றல் கோட்பாடுகளுக்குள்ளும் அடக்க முடியாத இணைய வழிக்கல்வியை பயன்படுத்தி பாடசாலைக்கல்வி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். பாகுபாடு என்று இணையக்கல்வியை புறக்கணிக்க வேண்டிய நிலையும்  ஏற்பட்டு இருக்காது. 

அதே வேளையில், நவீனம் என்றாலே இப்படியான கருவிகள் சார்ந்த ஏற்பாடுகள் மட்டும்தானா? கல்விக் கொள்கைகளில கற்பித்தல் அணுகுமுறைகளில், பாடங்களில் நவீனம் தேவையில்லையா? படிப்பது என்பதே மனப்பாடம் செய்வது என்பதில் மாற்றம் வேண்டாமா? என்பது தொடர்பாச் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்று தனியார்கல்வி நிலையங்கள் மண் மாபியா நெல் மாபியா சீனி மாபியா என்பது போல் கல்வி மாபியாவாக உருவெடுத்துள்ளது நகர்புற வசதியுடைய மாணவர்களிடம் இருந்து பெரும் தொகையான பணத்தையும் ஏனைய வழிகளில் கல்வி வாய்ப்பு அற்ற சந்தர்பங்களைப் பயன்படுத்தி அறவிடுகின்றனர். கால நேரம் அற்று அதிகாலை 3 மணி முதல் இரவு 12 மணிவரை நடாத்துகின்றனர் இவற்றை கட்டுப்படுத்த நேரவரையறைகளை அமுல்படுத்த அரசு பொறிமுறைகளை வகுக்க வேண்டும் அல்லாது விடின் எதிர்கால சந்ததியினர் உளவியல்ரிதியாகவும் மருத்துவரிதியாகவும் பாதிப்படைவதனை தவிர்க்க முடியாமல் போய்விடும்.

இதேவேளை பல மாதங்களாக பாடசாலைகள் இயங்காத போதும் பாடசாலைக்கு அரசால் வழங்கப்படும் கற்றல் சாதனங்களை வாங்குவதற்குகான  தரஉள்ளீடுகள் போன்ற ஏனைய நிதியீட்டங்கள் அரசு நேரடியாக மாணவருக்கு கிடைக்க வழிவகுக்க வேண்டும் அல்லாத விடின் பாடசாலைகளில் அவை முறையற்ற விதத்தில் கையாளப்படும். இன்று அரசால் கொவிட்கால கற்றலுக்கு பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட நிதி மாணவரின் இடர்காலச் செயற்றிட்டத்துக்கு சென்றடைந்ததா? என்பதனை கணக்காய்வு செய்தல் வேண்டும் அரசு தற்போதைய  பொருளாதார சூழலிலும் கல்விக்கு ஒதுக்கும் நிதியீட்டங்கள் பாடசாலைகளில் வேறு தேவைக்கோ தனிப்பட்டரிதியிலே கையாளப்படுவதனை கண்டறியும் பொறிமுறை விரைவாக உருவாக்கப்பட வேண்டும்.

எது எவ்வாறு ஆயினும் எம் முன்னோர் கல்வி உயிரிலும் மேலானது என்றனர் கொவிட்காலத்துக்கு பின்னராவது  இலங்கையில் உள்ள கல்வியியல் துறை விரிவுரையாளர்கள் கல்வி நிர்வாகிகள் அதிபர்கள் ஆசிரியர் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இணைந்து நாட்டுக்கு பொருத்தமான முறையில் இடர்காலங்களில் எவ்வாறு இலங்கையின் புகழ் éத்த இலவசக் கல்வியை முன்னெடுக்கலாம் என சிந்திக்க வேண்டும்   

இராமச்சந்திரன் நிர்மலன் 

B.Sc in Mathematics & computingPGDE,MEd

ஆசிரியர். புற்றளை

இதையும் படிங்க

கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் "கழுதை சுமந்த கவிதைகள்" நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக...

இலங்கையில் அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவன ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் திறைசேரி செயலாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ள இந்த...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே, கொரோனா பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தற்போதைய சுதந்திரமான சூழலை...

ஜாதி, மதம் கடந்து நாட்டு முன்னேற்றத்திற்கு சேவையாற்றுங்கள்!

புது டெல்லி:என்.சி.சி மாணவர்கள் மதம், ஜாதி, வகுப்பு பிரிவினைகளை கைவிட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காக சேவையாற்ற வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த...

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை...

இலங்கையில் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

இந்த விடயம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சபையின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால்நாளைமுதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டாலும் அதனை மேலும் இரண்டு...

தொடர்புச் செய்திகள்

கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் "கழுதை சுமந்த கவிதைகள்" நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக...

இலங்கையில் அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவன ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் திறைசேரி செயலாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ள இந்த...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே, கொரோனா பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தற்போதைய சுதந்திரமான சூழலை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தங்கத்தின் விலையில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் போக்கு காணப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வார இறுதியில் சிறியளவை...

ரணிலை நாட்டின் தலைவராக தெரிவு செய்யும் யோசனை

நாட்டின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய வேண்டும் என்ற யோசனை கரந்தெனிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கள் நேசித்த ‘மக்கள் நேசன்’ மருத்துவர் அமரர் சிதம்பரநாதன் | மு.தமிழ்ச்செல்வன்

ஐயாவிடம் காட்டினால் வருத்தம் சுகமாகும் என நீண்ட வரிசையில் காத்திருந்து நோயை கூறி ஐயாவின் வார்த்தைகளை கேட்டு செல்வதற்கு என்றே வைத்தியசாலைக்கு ஒரு...

மேலும் பதிவுகள்

இங்கிலாந்தில் மக்கள் முகக்கவசம் அணியத் தேவை இல்லை | போரிஸ் ஜோன்சன்

இங்கிலாந்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவடையத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அடுத்த வாரம், அதாவது எதிர்வருகிற...

விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது ஷ| பிரபல நடிகர் குமுறல்

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது அந்த வகையில் பிரபல நடிகர் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். ஹிந்தி திரையுலகில் பல படங்களில் நடித்தும், மகாபாரத...

மலேசியாவில் தேடுதல் வேட்டை | ஆவணங்களற்ற 32 புலம்பெயர்ந்தோர் கைது

மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள Putatan பகுதியில் மலேசிய குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் ஆவணங்களற்ற 32 புலம்பெயர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவிலிலும் பக்தர்கள் காலையிலேயே திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

மொட்டுவின் வெற்றிக்கு நாமே காரணம் | நாமலுக்கு தயாசிறி பதிலடி

"ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றது" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்...

செல்ஃபி எடுப்பதற்கு கட்டணம் இல்லை

கொழும்பு துறைமுக நகரில் புதிதாக திறந்துவைக்கப்பட்டுள்ள மெரினா நடைபாதையில் ‘செல்ஃபி’ எடுப்பதற்கும், தனிப்பட்ட காணொளிகளைப் பதிவு செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என கொழும்புத் துறைமுக நகர்...

பிந்திய செய்திகள்

கவிஞர் கவிகூத்தனின் “கழுதை சுமந்த கவிதைகள்” நூல் இலண்டனில் வெளியீடு

புலம்பெயர் தேசத்தில் பலராலும் அறியப்பட்ட கவிஞர் கவிகூத்தனின் "கழுதை சுமந்த கவிதைகள்" நூல் இன்று இலண்டன் மேற்கு நகரில் அமைந்துள்ள ஹரோ வீல்ட் ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மிகவும் சிறப்பாக...

இலங்கையில் அரசாங்கத்தின் வசமுள்ள நிறுவன ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு!

அதற்கமைய, கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் திறைசேரி செயலாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ள இந்த...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே, கொரோனா பரவல் நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். தற்போதைய சுதந்திரமான சூழலை...

ஜாதி, மதம் கடந்து நாட்டு முன்னேற்றத்திற்கு சேவையாற்றுங்கள்!

புது டெல்லி:என்.சி.சி மாணவர்கள் மதம், ஜாதி, வகுப்பு பிரிவினைகளை கைவிட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்காக சேவையாற்ற வேண்டும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த...

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் எவற்றில் கவனம் செலுத்த வேண்டும்…

பெண்களின் வாழ்க்கையில் திருமணம் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. திருமண நாளுக்கு தயாராகும் பெண்கள், எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்ப்போம்.

இதயத்தை பலப்படுத்தும் காலிபிளவர் முட்டை பொடிமாஸ்

காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதை சமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால்,...

துயர் பகிர்வு