Friday, October 22, 2021

இதையும் படிங்க

போரும் வைரசும் ஒன்றல்ல | நிலாந்தன்

ஒரு தனிப்பட்ட உரையாடலின்போது ஒரு ராஜதந்திரி என்னிடம் சொன்னார் உங்களுடைய நாட்டில் மிக அடிமட்டம் வரையிலும் இறங்கி வேலை செய்யும் ஒரு சுகாதாரக்...

சாமிநாத ஐயருக்குப் பின்னர் ஓர் ‘ஐயர்’ | கலாநிதி சுதர்சன்

நூல்களால் கட்டும் தேசம்   கலாநிதி செல்லத்துரை சுதர்சன் (தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை) 

13 ஆவது திருத்தத்தில் இருந்து இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு? | நிலாந்தன்

இரண்டாம் வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்ற தலைப்பில் ஒரு மெய்நிகர் மாநாடு கடந்த முதலாம் திகதி இடம்பெற்றது. இரண்டாம் வட்டுக்கோட்டை தீர்மானக் குழு...

83யூலை நினைவுகளின் பின்னணியில் ராஜமகேந்திரனை நினைவு கூர்தல் | நிலாந்தன்

மகாராஜா ஊடக குழுமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரிடம் சிவராம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ உங்களுடைய தலைவர் ராஜமகேந்திரனிடம் ...

கொத்தலாவல சட்டமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது எதனை?

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி...

வைரஸ் தொற்றுக்குள்ளும் வாள்கள் ஓயவில்லை? நிலாந்தன்

அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு  பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு...

ஆசிரியர்

திருக்கேதீஸ்வரத்திலிருந்து எழுவைதீவு வரை: மதமுரண்பாடுகளைத் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுதல்: நிலாந்தன்

அண்மையில் தமிழ் வாக்குகள் சாதி ரீதியாகவும் சமய ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரை தொடர்பாக ஒரு சமூக செயற்பாட்டாளர் என்னோடு கதைத்தார். அவர் காரைநகரில் உள்ள சமூக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்.கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது இந்த அமைப்பு என்னோடு தொடர்பில் இருந்தது.அவர்களை ஆதரித்து கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன்.

என்னோடு தொலைபேசியில் கதைத்த நண்பர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். சாதிரீதியாக சமூகத்தை பிரிப்பதற்கு நாங்கள் எதிராகவே இருப்போம். நீங்கள் கூறுவது போல தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையை உள்ளடக்கியதுதான். சமூக விடுதலை எனப்படுவது தேசிய விடுதலைக்கு எதிராகத் திரும்பக்கூடாது. ஆனால் காரைநகரில் நமது சமூகத்தின் மீதான அவமதிப்பும் புறக்கணிப்பும் அப்படியே இருக்கும் பொழுது நாங்கள் எப்படித் தமிழ் தேசிய நீரோட்டத்தில் கரைவது? என்று கேட்டார் இக்கேள்விக்கு பதில் கூற வேண்டியது அரங்கில்லுள்ள தமிழ் தேசிய கட்சிகள் தான்.

தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சமூகங்கள் மத்தியில் தமிழ் தேசியக் கட்சிகள் போதியளவு வேலை செய்திருக்கவில்லை. அந்த வெற்றிடம்தான் தேசிய வாதத்துக்கு எதிர் நிலைப்பாடு உள்ள கட்சிகள் மேற்படி சமூகங்களை தமது வாக்கு வங்கிகளாக மாற்ற முயற்சிப்பதற்கு காரணம்
அதாவது தேசிய நோக்கு நிலையிலிருந்து தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் முரண்பாடுகளை கையாளத் தேவையான பக்குவமும் தத்துவத் தரிசனமும் அரங்கில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளிடம் இல்லை. அந்த வெற்றிடத்தில்தான் இவ்வாறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேட்சை குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனவா?

இவ்வாறு சமூக ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்படும் சமூகங்கள் தங்களுக்குள் திரளாகி தமக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது தவிர்க்க முடியாதது. சமூக விடுதலைக்காக குறிப்பிட்ட சமூகங்களை திரளாக்காமல் தேசிய விடுதலைக்கான பெருந்திரளாக்கம் பற்றி சிந்திக்க முடியாது. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் அந்த ஒடுக்குமுறையின் பெயரால் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரளாவது தவிர்க்க முடியாதது. தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான். ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது ஜனநாயகத் அடிச்சட்டத்தின் மீது ஒருவர் மற்றவருக்கு சமம் என்ற அடிப்படையில் திரளாக்குவதுதான். எந்த ஓர் அடையாளம் காரணமாக ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகிறதோ அந்த அடையாளத்தின் பேரால் அவர்கள திரளாக்குவது தவிர்க்க முடியாதது.

இவ்வாறு இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் அந்தப் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பெருந் திரளாகுவதே ஒரு தேசமாக வாழ்தல் என்று பொருள்படும். ஆனால் அந்தக் திரட்சிக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது.

இந்த விளக்கம் மத முரண்பாடுகளுக்கும் பொருந்தும். ஒரு தேசிய திரட்சிக்குள் மதங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்க முடியாது. மாறாக மதப் பல்வகைமை அங்கே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு மதப் பல்வகைமையை ஏற்றுக்கொண்டு தேசிய நோக்கு நிலையிலிருந்து மத முரண்பாடுகளை அணுக வேண்டும். ஆனால் அண்மைக்காலங்களில் தமிழ்ச் சமூகத்துக்குள் மத முரண்பாடுகள் மதநோக்கு நிலையில் இருந்தே அணுகப்படுவதாகத் தெரிகிறது.

குறிப்பாக திருக்கேதீச்சரம் வளைவு விவகாரம், ஊர்காவற்றுறையில் வீதிகளின் பெயர் மாற்றப்பட்ட விவகாரம், எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் விவகாரம் என்பன ஏற்படுத்திய எதிர்விளைவுகள் அதைத்தான் காட்டுகின்றன.
திருக்கேதீச்சரம் வளைவு விவகாரத்தை நீதிமன்றத்துக்கு போக விட்டது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் ஒரு தோல்வி. அந்த விவகாரத்தை மத பீடங்கள் அணுகுவதற்கு பதிலாக அதை ஒரு சட்டப் பிரச்சினையாக அணுகுவதற்கு பதிலாக அதை ஒரு தேசிய பிரச்சினையாக தேசிய நிலையிலிருந்து ஒரு சிவில் அமைப்போ அல்லது கட்சியோ அல்லது பேரவை போன்ற ஒரு மக்கள் இயக்கமோ கையாண்டு இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசியல் தரிசனமுடைய அமைப்புகளும் கட்சிகளும் இல்லாத வெற்றிடத்தில் அந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது.

அந்த வெற்றிடம் காரணமாகத்தான் ஊர்காவற்றுறையில் வீதிகளைப் பெயர் மாற்றுவது ஒரு விவகாரமாகியது. எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் விவகாரம் மத முரண்பாடுகளைப் பெரிதாகும் விதத்தில் விளைவுகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக எழுவைதீவு விவகாரத்தில் யாழ்பாணத்தை மையமாகக் கொண்ட வலம்புரி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பத்தியில் தகவற் பிழைகள் இருப்பதாக எழுவைதீவு மக்களில் ஒரு பகுதியினர் கூறுகிறார்கள்.அப்பத்திரிகையின் அலுவலகத்துக்கு வந்த ஒரு குழுவில் இந்து மதத்தினரும் அடங்குவர் என்று அவர்கள் கூறுகிறார்கள். தமக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டே தாங்கள் அப்பத்திரிகை அலுவலகத்துக்கு வந்ததாக கூறுகிறார்கள்.அவர்களை அவ்வாறு போகுமாறு தூண்டியது ஒரு கத்தோலிக்க மதகுருவே என்று பத்திரிகைத் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

இது விடயத்தில் யார் பிழை என்பதை விடவும் இந்த விவகாரத்தை எந்த நோக்கு நிலையிலிருந்து அணுக வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த விவகாரத்தை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்தே அணுக வேண்டும்.

வலம்புரி பத்திரிகை பத்திரிகை கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த ஒரு பத்திரிகை. கூட்டமைப்புக்கு எதிரான குரல்களை அது ஒலிக்கச் செய்தது. அந்த அடிப்படையில் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு மாற்று அரசியலுக்கு உரிய ஊடகத் தளமாக வலம்புரி பத்திரிகை குறிப்பிடத்தக்க அளவிற்கு மேலெழுந்தது. குறிப்பாக விக்னேஸ்வரனின் எழுச்சி, தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சி, அப்பத்திரிகையின் எழுச்சி என்பன ஏறக்குறைய சமாந்தரமானவை.

வலம்புரியின் ஆசிரியர் தமிழ் மக்கள் பேரவையில் ஒரு பிரதானி. எல்லா எழுக தமிழ் ஆர்ப்பாட்டங்களின் போதும் அவரை முன்னணியில் காணலாம். தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரனின் முதன்மையை தொடர்ச்சியாக வலியுறுத்தும் ஒருவர் அவர். விக்னேஸ்வரன் தனது புதிய கூட்டை அண்மையில் அறிவித்த பொழுது அவரும் அங்கே இருந்தார். கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தேசிய அரசியலில் ஒரு மாற்று தளத்துக்கு உரிய ஊடகமாக வரமுயலும் அப்பத்திரிகை மத முரண்பாடுகளை தமிழ்தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகினால் அது தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயத்தை பலப்படுத்தும்.

வலம்புரி பத்திரிகை இந்துமதச் சாய்வுடன் செய்திகளை எழுதுவதாக ஒரு அவதானிப்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு வடமாகாணசபையின் முஸ்லிம் உறுப்பினர் தொடர்பிலும் அப்பத்திரிகை வெளியிட்ட செய்தி சர்சையாகியது. குறிப்பாக மத விவகாரங்களில் அப்பத்திரிகையின் நிலைப்பாடு இந்து மதத்துக்கு அதிகம் சாய்வோடிருப்பதாக ஏனைய மதப் பிரிவினரால் பார்க்கப்படுகிறது. இது மாற்று அரசியலுக்கும் கூடாது. விக்னேஸ்வரனுக்கும் கூடாது.

மத முரண்பாடுகளை மத நோக்கு நிலையிலிருந்து அணுகாமல் ஆகக் கூடிய பட்சம் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகினால் சில சமயங்களில் அகத்தணிக்கையும் சில சமயங்களில் மதப் பொறையும் தேவைப்படலாம்.

தமிழ்தேசிய பரப்பில் இந்துக்களே அதிகம் உண்டு. எனவே இந்துக்கள் தாம் பெரும்பான்மை மதப் பிரிவினர் என்ற அடிப்படையில் ஏனைய சிறுபான்மை மதப் பிரிவினரை சமமாகப் பார்க்க வேண்டும்.அதாவது தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து மதப் பிணக்குகளை அணுக வேண்டும். அதுதான் தமிழ் மக்களை ஒரு பெரும் திரளாக திரட்டும் இல்லையென்றால் மதத்தின் பெயரால் தமிழ் மக்களை அது பிரித்துவிடும்.

இது விடயத்தில் ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு செழிப்பான பாரம்பரியம் உண்டு. இலங்கை தீவில் முதலில் தோன்றிய இளையோர் இயக்கமாகிய ஜப்னா யூத் கொங்கிரஸ் யாழ்ப்பாணத்தில்தான் தோன்றியது. அந்த அமைப்பை ஒருங்கிணைத்தவர் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரான ஹண்டி பேரின்பநாயகம். அவருக்குப்பின் தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டங்கள் என்று அழைக்கப்பட்ட வன்முறையற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர் எஸ். ஜே. வி செல்வநாயகம். அவர் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர். அதிகம் இந்துக்களை கொண்ட ஒரு சமூகம் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரை தந்தை என்று அழைத்தது. ஈழத்து காந்தி என்றும் அழைத்தது. இது காரணமாகவே தனது இறுதிக் காலகட்டத்தில் தந்தை செல்வா தனது பூதவுடலை இந்து முறைப்படி வேட்டி அணிவித்து தகனம் செய்யுமாறு இறுதி விருப்பம் தெரிவித்திருந்தார்.அதாவது ஈழத்தமிழர்கள் மதம் பார்த்துத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.

அதுமட்டுமல்ல கடந்த வருடம் ஈஸ்டர் குண்டு வெடிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ்க் கிறீஸ்தவர்களே. ஆனால் அதற்காக குறிப்பாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ரத்தம் சிந்தும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடவேயில்லை. ஈஸ்ட்டர் குண்டு வெடிப்பிற்குப் பின் ஒப்பீட்டளவில் தமிழ்ப் பகுதிகள்தான் முஸ்லீம் மக்களுக்கு அதிகம் பாதுகாப்பானவைகளாகக் காணப்பட்டன என்றும் கூறலாம்.

இப்படிப்பட்டதோர் மிகச் செழிப்பான மதப் பல்வகைமைப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு மக்கள் கூட்டம் அண்மைக் காலங்களில் மத முரண்பாடுகளால் பிளவுபடும் ஒரு நிலைமை மேலும் வளரக் கூடாது. இப்படிப்பட்ட முரண்பாடுகளை தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகிக் கையாண்டு தீர்க்கத்தக்க முதிர்ச்சியை, பக்குவத்தை, ஏற்புடைமையை, ஜனவசியத்தை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.தமிழ் மக்கள் பேரவை போன்ற மக்கள் இயக்கங்கள் அப்படி ஒரு வளர்ச்சியை அடைய வேண்டும். இல்லையென்றால் சாதியின் பேரால் சமயத்தின் பேராலும் பிரதேசவாதத்தின் பெயராலும் தமிழ் மக்கள் பிரிக்கப்பட்டு விடுவார்கள்.

-நிலாந்தன்

இதையும் படிங்க

பரீட்சைப் பெறுபேறுகளும் ஒப்பீடுகளும் | இராமச்சந்திரன் நிர்மலன்

அண்மைக் காலங்களில் க.பொ.த சாதாரண க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் வெளியிடப்படும் போது எல்லாம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் வீழ்ந்து விட்டது சரிந்துவிட்டது...

முத்தரப்பு இழு விசைகளுக்குள் சுழித்துக்கொண்டோடும் இலங்கை? | நிலாந்தன்

கடந்த சில வாரங்களாக நாட்டில் நடப்பவற்றை தொகுத்துப் பார்த்தால் அரசாங்கம் மேற்கு,ஐநா,இந்தியா போன்ற தரப்புக்களை நோக்கிய வெளியுறவு...

ஜனாதிபதி தமிழ் டயாஸ்பொறவை அழைக்கிறார் | நிலாந்தன்

இது டயாஸ்பொறக்களின் காலம். அதாவது புலம்பெயர்ந்த சமூகங்களின் காலம். அல்லது நாடு கடந்து ஒரு தேசமாக அல்லது தேசத்துக்கு வெளியே ஓர் உளவியல்...

ஊசிக் கதைகள் | நிலாந்தன்

கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல் தமது பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காமல் செயற்படுமாறு,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், சிறுவர் நோயியல்...

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? | நிலாந்தன்

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம்...

கொவிட்டுக்குப் பின்னரான பாடசாலைக்கல்வி எதிர் கொண்டுவரும் சவால்கள் | இராமச்சந்திரன் நிர்மலன்

அண்மைய காலங்களில் கொவிட் பெரும் தொற்று காரணமாக வேலை இழப்பு பொருளாதாரச்சரிவு சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்...

தொடர்புச் செய்திகள்

தமிழ் மக்கள் யார் யாரை வெல்ல வைப்பார்கள்? நிலாந்தன்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உங்களுக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் ? என்று எந்த கட்சியைக்  கேட்டாலும் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள் குறைந்தது மூன்று ஆசனங்கள் என்று. கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சை குழுக்களும் அப்படித்தான்...

மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தோற்பதா இல்லையா? | நிலாந்தன்

“உங்கள் சப்பாத்துப் பிய்ந்துபோனால், அதனைத் தைப்பதற்கு நீங்கள் திறமை மிக்க ஒரு சப்பாத்துத் தைப்பவனையே தேடுகின்றீர்கள். உங்களுக்குச் சுகவீனம் ஏற்பட்டால் சிகிச்சைக்காக நகரிலே மிகச் சிறந்த மருத்துவரையே நாடுகிறீர்கள். ஆனால், எல்லாக் கலைகளிலும்...

புனிதமிழந்த கோஷங்கள் – நிலாந்தன்

  அமெரிக்க எழுத்தாளரான ஹெனெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற நாவல் “போரே நீ போ” இந்நாவலின் இறுதிக்கட்டத்தில் அதன் பிரதான கதாபாத்திரம் தனக்குள் சிந்திப்பதாக பின்வரும் தொனிப்பட ஒரு பந்தி உண்டு “அமைதி ;...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இலங்கை கூடைப்பந்தாட்ட குழாமில் யாழ் இளைஞன்

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாம் விபரத்தை இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ளது.  இந்த கூடைப்பந்தாட்ட குழாத்தில்...

டுபாயில் வேலை பெற்றுத்தருவதாக பண மோசடி | கணவன், மனைவி கைது

சுற்றுலா வீசா ஊடாக டுபாயில்  வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி தலா 9 இலட்ச ரூபாவை பெற்று மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்த தம்பதியரை...

பாகிஸ்தானுடன் இலங்கை கொண்டுள்ள இராஜதந்திர உறவுக்கு எதிராக போராட்டம்

இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசுடன் மேற்கொள்ளும் இராஜ தந்திர உறவினை எதிர்த்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த...

மேலும் பதிவுகள்

அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் | சமந்தா விவாகரத்து குறித்து ஸ்ரீரெட்டி பரபரப்பு கருத்து

சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காதல்...

அத்தியாவசியமற்ற பயணங்களை டிசம்பர் இறுதி கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தல்

அத்தியாவசியமற்ற பயணங்களை குறைந்தபட்டசம் டிசம்பர் இறுதி வரை கட்டுப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலா குணவர்தன வலியுறுத்தல்.

இரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘மோகன்தாஸ்’ பட செகண்ட் லுக்

'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய திரைப்படம் 'மோகன்தாஸ்'.  இப்படத்தில் நடிகர் விஷ்ணு...

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

லைக்குகளை வாரி குவிக்கும் பாம்பு வடிவ கேக்!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் ஒருவர் உயிருடன் உள்ள பாம்பு போல கேக் ஒன்றை தயாரித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி...

புதிய கொவிட் வகைகள் தொடர்பில் எச்சரிக்கை

புதிய கொவிட்-19 வகைகள் இலங்கைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு...

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

துயர் பகிர்வு