Sunday, June 13, 2021

இதையும் படிங்க

இலங்கைத்தீவில் சீன சகாப்தம்? | நிலாந்தன்

சீனா இலங்கைக்குள் இறங்கியது இதுதான் முதற்தடவையல்ல.ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளுக்கு முன் 1411இல் சீனா இச்சிறுதீவை ஆகிரமித்திருகிறது. சீனாவின் மிங் அரச வம்சத்தின் காலத்தில்...

அஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது.. கவிஞர் தீபச்செல்வன்

அஸினுக்கு நடந்ததே சமந்தாவுக்கும் நடக்கப் போகிறது என்று கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். சர்ச்சை தோற்றுவித்துள்ள பேமிலி மேன் 2 இணைய தொடர் குறித்து தமிழ்நாடு பத்திரிகை ஒன்றில்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 38 | பத்மநாபன் மகாலிங்கம்

1. இந்து சமுத்திரத்தில் (Indian Ocean) டிசெம்பர் 26, 2004 ஏற்பட்ட பூகம்பத்தால் (earth quack) உண்டான சுனாமியால் (tsunami) தாக்கப்பட்ட நாடுகளில் ஶ்ரீ லங்காவும் ஒன்று. இந்த சுனாமியால்...

மே பதினெட்டை முன்வைத்து சிதிக்கப்பட வேண்டியவை | நிலாந்தன்

தாயகத்தில் இம்முறையும் அதிகம் மக்கள் மயயப்படாத ஒரு நினைவுகூர்தலைத்தான் காண முடிந்தது. அதேசமயம் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில்...

‘இலங்கை பொறுப்புக்கூறலில் இருந்து விலகினால்; சர்வதேச அமைப்புக்களிடமே அதற்கான பொறுப்பு’

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாது அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது.  தன்னுடைய பொறுப்புக் கூறலில்...

மே 18 நாளும் தமிழர்களும் | பரமபுத்திரன்

வாழ்விடங்களை இழந்து, உணவு, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெற்றுக்கொள்ள வழியின்றி, எப்படியாவது உயிர் தப்பி இந்த உலகில் நாங்களும் உயிருடன்...

ஆசிரியர்

கிழமைக்கொரு பிரச்சினை | உள்நோக்கம் என்ன? | நிலாந்தன்

இம்மாதம் 8ஆம் திகதி யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டது.அதற்கடுத்த கிழமை குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் எதிர்த்தார்கள்.அதற்கடுத்த கிழமை அதாவது கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நிலாவரை கிணறுள்ள பகுதியில் தொல்லியல் திணைக்களம் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இடையில் தீவுப்பகுதியில் நில அளவைத் திணைக்களம் படைத்தரப்புக்கு நிலங்களை அளக்க முற்பட்டபோது அதுவும் பிரச்சினையாகியது.நேற்று தையிட்டியில் ஒரு விகாரக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.இவையாவும் அண்மைக்கால பிரச்சினைகள் குறிப்பாக ஒரு குறுகிய காலகட்டத்திற்குள்  நடந்திருக்கும் பிரச்சினைகளை தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது?

இது ஜெனிவாவை நோக்கி செல்லும் காலம்.தமிழ் மக்கள் ஜெனிவா கூட்டத்தொடரை நோக்கி உரிய தயாரிப்புகளை செய்ய வேண்டிய ஒரு காலகட்டத்தில் இவ்வாறு புதுப்புது பிரச்சினைகள் உருவாக்கப்படுவதன்  பின்னணி என்ன?

விடை மிகவும் எளிமையானது.அரசாங்கம் தமிழ் மக்களை நீண்டகால பிரச்சினைகளுக்காக போராடுவதை விடவும் குறுங்கால உடனடிப் பிரச்சினைகளில் மூழ்க வைத்து தமிழ் மக்களின் கவனத்தை சிதறடிக்கிறது. இதை ஒரு உத்தியாக அவர்கள் அண்மைக் காலங்களில் முன்னெடுத்து வருகிறார்கள்.கிழமைக்கு ஒரு பிரச்சினை என்று வரும் பொழுது அரசியல் கட்சிகளினதும் செயற்பாட்டாளர்களும் குடிமக்கள் சமூகங்களினதும் கவனம் புதிய பிரச்சினைகளின் மீது குவியும்.இது அடிப்படைப் பிரச்சினைகளில் மீது தமிழ் மக்களின் கவனம் குவிவதை சிதறடிக்கும்.அதுமட்டுமல்ல இது சிங்கள மக்களின் கவனத்தையும் சிதறடிக்கும்.

எப்படியென்றால் ராஜபக்சக்களின் இரண்டாவது ஆட்சி முதலாவது ஆட்சியை போல இலகுவான ஒன்றாக இருக்கவில்லை என்பதைத்தான்  தென்னிலங்கையில் கடந்த ஓராண்டு கால அனுபவம் நிரூபித்திருக்கிறது.கோவிட்-19ஐக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.வைரஸ் தொற்றினால் முடக்கப்பட்ட பொருளாதாரம் முழுஅளவுக்கு நிமிர முடியவில்லை.ஒருபுறம் பொருளாதார நெருக்கடிகள்;இன்னொருபுறம் அரசாங்கத்தின் இறக்குமதி கொள்கைகளால் நாட்டில் சாதாரண பொருட்களின் விலைகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன.மஞ்சள் இல்லாத பழப்புளி இல்லாத குசினிகளிலிருந்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியிருக்கிறது.இப்பிரச்சினைகளில் இருந்து சிங்கள பொதுசனத்தின் கவனத்தை திசை திருப்புவதற்கு அரசாங்கம் தமிழ் பகுதிகளில் புதிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.அதுபோலவே வைரஸ் தொற்றினால் இறந்துபோன முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைப்பதற்கு அனுமதிக்காமை போன்ற நடவடிக்கைகளும் மேற்படி நோக்கத்தோடுதான் முன்னெடுக்கப்படுகின்றன.

இது விடயத்தில் தமிழ்த் தரப்பு அரசாங்கத்தின் கவனத்தை கலைக்கும் உத்திகளின் பின்னால் இழுபட்டுச் செல்லப் போகின்றதா?அல்லது இவை யாவற்றையும் ஒரு ஒட்டுமொத்த வழிவரைபடத்திற்குள் உள்ளடக்கி உரிமைகளுக்கான ஒரு பரந்துபட்ட ஒன்றிணைக்கப்பட்ட தொடரான போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறதா?என்பதே இப்போதுள்ள முக்கியமான கேள்வியாகும்.ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு பிரச்சினையைக் கிளப்பி தமிழ் மக்களின் கவனத்தைக் சிதறடிக்கலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இது விடயத்தில் தமிழ்மக்கள் இச்சிறுசிறு பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டுமொத்த பிரச்சினையின் பிரிக்கவியலாத பகுதிகளாக அவற்றை அவற்றின் முழுமையான படத்துக்குள் வைத்து விளங்கிக் கொள்வது அவசியமானது.

தொல்லியல் திணைக்களம்;நில அளவைத் திணைக்களம்;வனவள திணைக்களம்; வனஜீவராசிகள் திணைக்களம்; கடற்றொழில் நீரியல் திணைக்களம் ; நீதி பரிபாலனக் கட்டமைப்பு ;காவல்துறை போன்ற எல்லாக் கட்டமைப்புக்களும் அல்லது திணைக்களங்களும் அரசாங்கத்தின் உபகரணங்களே. தரைப்படை;வான்படை;கடற்படை;புலனாய்வுத்துறை முதலாக அனைத்தும் அரசாங்கத்தின் உபகரணங்களே. ஒரு அரசின் கொள்கை எதுவோ அதைத்தான் இந்த உபகரணங்கள் முன்னெடுக்கும்.அரசின் கொள்கை ஒடுக்குமுறை என்றால் அல்லது அரசின் கொள்கை சிங்கள-பௌத்த விரிவாக்கம் என்றால் அதைத்தான் இந்த உபகரணங்கள் முன்னெடுக்கும்.2009க்கு முன்புவரை அரசின் உபகரணங்கள் ஆகிய படையினர் யுத்தத்தை முன்னெடுத்தார்கள்.அதில் அவர்கள் 2009 மே மாதம் வெற்றியும் பெற்றார்கள்.

ஆனால் 2009 மே மாதம் வெற்றி கொள்ளப்பட்டது ஒரு விளைவு மட்டுமே. அது மூல காரணம் அல்ல.ஆயுதப்போராட்டம் எனப்படுவது ஒரு விளைவுதான். அது இன ஒடுக்குமுறையின் விளைவு.ஒடுக்குமுறைதான் மூல காரணம்.ஒரு பெரிய இனமும் பெரிய மதமும் முழுத்தீவுக்கும் உரிமை கோருவது.இவ்வாறு இன ஒடுக்குமுறையை ஒரு கொள்கையாக கொண்டிருக்கும் அரசுக் கட்டமைப்பின் உபகரணங்கள் ஆகிய படைத்தரப்பு அதை யுத்தமாக முன்னெடுத்தது.இப்பொழுது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின் அதே ஒடுக்குமுறையை அரசின் ஏனைய உபகரணங்கள் ஆகிய திணைக்களங்கள் முன்னெடுக்கின்றன.

இச்சிறிய தீவை ஆகக் கூடிய பட்சம் சிங்கள பௌத்த மயப்படுத்தி ஏனைய சிறிய மதங்களின் இனங்களின் மரபுரிமைச் சொத்துக்களை அழித்து எல்லாவற்றையும் சிங்கள மயப்படுத்துவதே அந்த அரசுக் கொள்கையாகும். அதைத்தான் கடந்த 11 ஆண்டுகளாக அரச திணைக்களங்கள் அதிகம் எதிர்ப்பின்றி முன்னெடுத்து வருகின்றன.

தொல்லியல் திணைக்களம் எனப்படுவது இதில் விசேஷமானது. எப்படியென்றால் சிங்கள பௌத்த மயமாக்கலின் கருவிகளில் அது பிரதானமானது.இலங்கைத்தீவின் தொல்லியல்துறை எனப்படுவது சிங்கள பௌத்தத்தை முதன்மைப்படுத்தி பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. அதன்படி தொல்லியல் திணைக்களம் மதப்பல்வகைமைக்கும் இனப் பல்வகைமைக்கும் மரபுரிமைப் பல்வகைமைக்கும் எதிராகச் செயற்படுவது. அது ஒரு பெரிய மதத்தின் ஒரு பெரிய இனத்தின் மேலாண்மையை முன்னெடுக்கும் ஒரு திணைக்களம். அதன்படி தொல்லியல் திணைக்களம் ஒரு மரபுரிமை சொத்து அமைத்திருக்கும் இடத்தை தன் பொறுப்பில் எடுத்து தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதில் எல்லைக் கற்களை நடும்.அரசின் உபகரணங்கள் ஆகிய நீதி பரிபாலனக் கட்டமைப்பும் காவல்துறையும் தொல்லியல் சட்டங்களின் பிரகாரம் அந்த எல்லைக் கற்களுக்கு உட்பட்ட பிரதேசத்தை பாதுகாக்கும்.  வெடுக்குநாறிமலை; பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் ;கன்னியா வெந்நீரூற்றில்; குருந்தூர் மலை போன்ற இடங்களில் அதைத்தான் அரசாங்கம் செய்ய முயற்சிகிறது.

தொல்லியல் துறையைக் குறித்து ஏற்கனவே சிங்களப் புலமையாளர்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். பேராசிரியை நீரா விக்ரமசிங்க பேராசிரியர் ஜகத் வீரசிங்க,கலாநிதி யூட் பெர்னாண்டோ போன்றவர்கள் இதைக் குறித்து மிக விரிவாக எழுதியிருக்கிறார்கள். கலாநிதி யூட் பெர்னான்டோ 2015 மார்ச் மாதம் கொழும்பு ரெலிகிராப்பில் “மரபுரிமையும் தேசிய வாதமும் – சிறீலங்காவின் விஷம்” என்ற தலைப்பில் மிக விரிவான ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் இது தொடர்;பான தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.(https://www.colombotelegraph.com/index.php/heritage-nationalism-a-bane-of-sri lanka/?fbclid=IwAR2E6z4DuaUvcG4EkBSAZtfsV7MQrHukSGuNoVvIU485yTAF1b4zB3ycJek fff) பேராசிரியர் ஜகத் வீரசிங்க சில ஆண்டுகளுக்கு முன் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை ஒன்றில் இலங்கைத் தீவின் தொல்லியல் துறையை “இனவாதத் தொல்லியல்துறை” என்று விவரித்திருக்கிறார். இலங்கைத் தீவின் தொல்லியல் சட்டங்கள் மிகப் பலமானவை.அவை சிங்கள பௌத்த மேலாண்மையை நியாயப்படுத்துபவை. தொல்லியல் சட்டங்களின் கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு பிணை எடுப்பது கடினமானது என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

வெடுக்குநாறி மலை

இவ்வாறானதொரு பின்னணியில் யுத்தத்தை வெற்றி கொண்டு ஒரே நாடு ஒரே தேசம் அல்லது ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறிக்கொண்டு வெற்றி கொண்ட இடங்களில் நிலை கொண்டிருக்கும் படைத்தரப்பின் உதவியோடும் ஒத்துழைப்போடும் அரசுத்திணைக்களங்கள் அதே கொள்கையை முன்னெடுத்து வருகின்றன.இவ்வாறு அரச திணைக்களங்கள் தமது எல்லைக் கற்களை நடும் இடங்களை எடுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும்.அவையாவும் ஒன்றில் கேந்திர முக்கியத்துவம் மிக்கவை அல்லது வளங்கள் மிகுந்தவை அல்லது அந்த இடத்திலிருந்து ஏனைய இடங்களை கண்காணிப்பது இலகுவானதாக இருக்கும்.

உதாரணமாக குருந்தூர் மலை எனப்படுவது அப்பகுதியிலேயே உயரமான இடம்.1981-ஆம் ஆண்டு அந்த இடத்தில் ஒரு விகாரை அமைக்கும் விதத்தில் அந்த மலையின்  உச்சிப் பகுதி மேலும் உயர்த்தப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அந்த முகட்டில் இருந்து  பார்த்தால் நாயாறு கடல் ஏரி உட்பட மாவட்டத்தின்  ஏனைய சில இடங்களையும் பார்க்கமுடியும் என்று அப்பகுதி வாசிகள் தெரிவிக்கிறார்கள்.குருந்தூர் மலைமுகட்டில் இருந்து பார்த்தால்  செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலும் அதில் வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலையும்  தெரியும் என்று முன்னாள் வட மாகாண சபை அமைச்சர் சிவனேசன் கூறுகிறார்.அது ஒரு உயரமான இடம்.எனவே அங்கே ஒரு விகாரையை அமைத்தால் அது அந்தப்பகுதி முழுவதற்கும் தெரியும்.அதாவது சிங்கள-பௌத்த விரிவாக்கத்தின் வெற்றிச்சின்னமாக அது வானில் உயர்ந்து நிற்கும்.

இப்படித்தான் அண்மையில் தீவுப்பகுதியில் நில அளவைத் திணைக்களத்தால் அளக்கப்பட்ட தனியார் காணிகளில் பெரும்பாலானவை மேட்டுக் காணிகள் என்று கூறப்படுகிறது.அதுமட்டுமல்ல அவை நன்னீர் ஊற்றுக்கள் உள்ள நிலப்பகுதிகள் என்றும் கூறப்படுகிறது.தீவுப்பகுதி நீர்த்தட்டுப்பாடு உள்ள இடம்.அங்கெ படைத்தரப்பு அதிகளவு குடிநீரை நுகர்வதாக முறைப்பாடுகள் உண்டு.இப்படிப்பட்டதொரு பிரதேசத்தில் காணப்படும் நீர்வளம் உள்ள நிலப்பகுதியை நில அளவைத் திணைக்களம் படைத்தரப்புக்கென்று அளக்க முற்படுகின்றது.இவ்வாறு நில அளவைத் திணைக்களம்,தொல்லியல் திணைக்களம் போன்றன தங்களுடைய எல்லைகள் என்று அளவிடும் பிரதேசங்கள் வளம் பொருந்தியவை என்பதோடு கேந்திர முக்கியத்துவம் மிக்கவைகளாகவும் காணப்படுகின்றன.இப்படிப்பட்ட நிலப்பரப்புகளை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் அவர்கள் சிங்கள பௌத்த மயமாக்கலை மேலும் விரிவு படுத்தலாம்;பலப்படுத்தலாம்.

ஏற்கனவே கிழக்கில் திருமலையிலும் அம்பாறையிலும் தமிழ் மக்களின் இனச்செறிவை அவர்கள் வெற்றிகரமாகக் குறைத்துவிட்டார்கள்.மிஞ்சியிருப்பது மட்டக்களப்பு.அங்கே இப்பொழுது மேய்ச்சல்  தரைகளை ஆக்கிரமிக்க முற்படுகிறார்கள்.மேய்ச்சல் தரைகளை இழந்தால் விவசாயிகள்  கால்நடைகளைப் பராமரிக்க முடியாது.கால்நடைகள் இன்றி வேளாண்மை முழுமையடையாது.எனவே கால்நடைகளைப் பராமரிக்க முடியாத விவசாயி ஒரு கட்டத்தில் விவசாயத்தையும் கைவிடும் நிலை வரலாம்.அப்படி வந்தால் என்ன நடக்கும்? ஏற்கனவே மட்டக்களப்பில் மண்முனை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் மூன்றில் இரண்டு  குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர்-குடும்பத் தலைவி அல்லது தலைவன்- மத்தியகிழக்குக்கு வேலைக்குப் போய்விட்டார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் உண்டு.இது 2017ஆம் ஆண்டுக்குரிய புள்ளிவிபரம். இவ்வாறு குடும்பத் தலைவனோ அல்லது தலைவியோ  வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றால் பிள்ளைகளின் நிலை என்னவாகும்?குடும்பத்தின் நிலை என்னவாகும்? எனவே மேய்ச்சல் தரை விவகாரம் எனப்படுவது தனிய மாடுகளோடு சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல அது மட்டக்களப்பில் விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கக் கூடியது.

மேய்ச்சல் தரைக்காக

ஏற்கனவே கிழக்கில் ஒரு தொல்லியல் செயலணி செயல்பட்டு வருகிறது.அதில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை.இப்படியாக மட்டக்களப்பில் தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி அதன்மூலம் அரசாங்கம் சிங்கள-பௌத்த விரிவாக்கத்தை இலகுவாக முன்னெடுக்கலாம்.இதுதவிர கிழக்கில் கிழக்கு மையவாதம் என்று கூறிக்கொண்டு ஒரு பகுதி அரசியல்வாதிகள் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு தென்னிலங்கையை நோக்கி திரும்பி விட்டார்கள்.இப்பொழுது மேய்ச்சல் தரைக்கும் ஆபத்து வந்திருக்கிறது.
இவ்வாறு கிழக்கு இழக்கப்படுமாக இருந்தால் அதன்பின் தமிழ் மக்கள் தாயகம் வடக்கு-கிழக்கு இணைப்பு என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருக்க முடியாது.

கிழக்குக்கு அடுத்தபடியாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் மணலாறு பிரதேசத்தில் அவர்கள் ஏற்கெனவே வெற்றி பெற்று வருகிறார்கள். கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தாமரை மொட்டுக்கு அதிக வாக்குகள் கிடைத்த இடங்களுக்கு நிறம் தீட்டினால் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் நிலத் துண்டில் ஒரு பகுதிக்குள் செறிவாக தாமரை மொட்டு நிறத்தை பார்க்கலாம்.சில தசாப்தங்களுக்கு முன்பு மணலாறில் சில ஆயிரங்களாக குடியமர்த்தப்பட்ட மக்கள் இப்பொழுது ஒரு தேர்தல் தொகுதி என்று கூறத்தக்க வளர்ச்சியை நோக்கிப் பெருகிவிட்டார்கள்.இதுவும் வடக்கு கிழக்கு இணைப்பை பௌதிக ரீதியாக துண்டிக்கக்கூடியது.

இவ்வாறு  கிழக்கில் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு அடுத்தகட்டமாக அரசாங்கம் வடக்கை நோக்கி வரமுடியும்.இலங்கைத் தீவில் அதிகம் சன அடர்த்தி குறைந்த மாவட்டங்களில் முல்லைத்தீவும் ஒன்று.அங்கே எண்பத்தியோரு விகித நிலப்பரப்பு அரச திணைக்களங்களிடம் உண்டு.19 விகிதம்தான் தமிழ் மக்களிடம் உண்டு.அந்த 19 விகிதத்திலும் அபகரிக்க கூடிய பகுதியை எப்படி அபகரிக்கக்கலாம் என்று திணைக்களங்கள் திட்டமிடுகின்றன.

எனவே இது ஒட்டுமொத்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதிதான்.அதை ஒட்டுமொத்த ஒடுக்குமுறையில் இருந்து பிரித்துப் பார்க்கமுடியாது. அதுபோலவே அதற்கெதிரான போராட்டமும் முழு அளவிலான ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்கவேண்டும்.அப்படிப்பட்ட  ஒரு போராட்டத்தைக் குறித்த ஒட்டுமொத்த தரிசனமுடைய தலைவர்கள் வேண்டும். வடகிழக்கு குடிமக்கள் சமூகத்தால் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை -பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை என்ற பெயரில் -வரும் மூன்றாம்  திகதி முதல் ஆறாந் திகதிவரை ஒழுங்குசெய்யப் பட்டிருகிறது.

ஒரு நாள் கடையடைப்பு;ஒருநாள் எழுகதமிழ்;ஒரு நாள் ஊர்வலம் போன்றனவோ அல்லது குறியீட்டு வகைப்பட்ட கவனஈர்ப்புப் போராட்டங்களோ ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை காலாவதியாகிவிட்டன.முஸ்லிம்கள் அண்மைகாலங்களில் முன்னெடுத்த கபன் துணிப் போராட்டமும் அடுத்தகட்டத்துக்கு வளரவில்லை.காணாமல் ஆகப்பட்டவர்களுக்கான போராட்டமும் அரசியல் கைதிகளுக்கான போராட்டமும் தமிழ் அரசியலின் இயலாமையைக் காட்டுகின்றன. யாரும் போராடி தன்னை எதுவும் செய்ய முடியாது என்று அரசாங்கம் நம்புகிறது.அந்த நம்பிக்கையை உடைக்கத்தக்க விதத்தில் ஒரு புதிய அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்க நாட்டில் யாருண்டு?

நிலாந்தன்

இதையும் படிங்க

எரிக்கப்பட்ட நூலகமும் எரிக்கப்பட முடியாத அறிவும் | நிலாந்தன்

கடந்த 31ஆம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் நாற்பதாவது நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டித்தார்கள். நூலக எரிப்புக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளில்...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 40 | பத்மநாபன் மகாலிங்கம்

1945 ஆம் ஆண்டு உலகமகாயுத்தத்தின் போது அமெரிக்கா, யப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாக்கி என்ற இடங்களில் வீசிய அணுக்குண்டுகளாலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் தாக்குதலாலும் யப்பான் மிகப்பெரிய அழிவை சந்தித்திருந்தது....

வண் டே மாஸ்க்கும் சமூக விழிப்பும் | நிலாந்தன்

இந்தியாவில் வசிக்கும் ஓர் ஈழத்தமிழர் கூறினார் கொரோன வைரஸ் எனப்படுவது எங்களுடைய...

ஈழச் சிவத் தலங்களில் ஒன்றான உருத்திரபுரீச்சரம்! | ஜனனி மோகனதாஸ்

உருத்திரபுரத்தின் பிரதான ஆலயமாக உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரம் சிவாலயம் காணப்படுகிறது. இலங்கையில் முதன்மை கொண்ட சமயமாக சைவசமயம் விளங்கியமை குறிப்பிடத்தக்கது. திருமூலநாயனார் ஈழத்தை சிவபூமி...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 39 | பத்மநாபன் மகாலிங்கம்

விவசாயிகளைத் தவிர ஏனையவர்கள் எருதுகள் பற்றிய பல உண்மைகளை அறிய மாட்டார்கள். எருதுகளை வளர்ப்பதில் பல்வேறு படிமுறைகள் உண்டு. பசு ஒன்று கன்று ஈன்றதும் ஆண் கன்றுகளை நாம்பன்கள் என்றும்,...

நான் யாழ் நூலக வாயில் சரஸ்வதி பேசுகிறேன் | ஜூட் பிரகாஷ்

வணக்கம் உறவுகளே,  நான் தான் யாழ்ப்பாண பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன்.

தொடர்புச் செய்திகள்

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சும்மா இருப்பது பற்றி! சும்மா படித்துப் பாருங்கள்!!

*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. *அது சரி...

அன்றான சிக்கனம் சேமிப்பை உயர்த்தும்

எல்லாவற்றையும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தினால் மாதம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை சேமிக்கலாம். இன்றைய சூழலுக்கு சேமிப்பு என்பது மிக மிக அவசியம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14ஆம் திகதி திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை...

மேலும் பதிவுகள்

இந்த நடிகருடன் இணைந்து பணியாற்ற ஆசை – பிரபல இயக்குனர்

பிரபல நடிகர் யோகிபாபுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதற்கு யோகிபாபு ருவிட்டர் வாயிலாக நன்றி...

‘இளையராஜாவின் மோதிரம்’ – ஒரு சுவாரசியமான படத்தின் கதை!

இது “இளையராஜாவின் மோதிரம்" என்ற வெளிவராத படத்தின் துவக்கவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என ஸ்டில்ஸ் ரவி பகிர்ந்துள்ளார்.  கவிஞர்...

போகோ ஹராம் தலைவர் உயிரிழந்து விட்டதாக தகவல்

நைஜீரியாவின் போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் உயிரிழந்து விட்டதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பல் தீ விபத்து தொடர்பில் சட்ட நடவடிக்கை!

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோருவதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நீதி...

கொழும்பில் கரை ஒதுங்கிய ஆமை : இதுவரை 17 ஆமைகள் மீட்பு

கொழும்பு காலிமுகத்திடல்  கடற்கரையில்  இறந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது. கொழும்புத் துறைமுக கடற்பரப்பில் அண்மையில் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்திற்குள்ளாகிய நிலையில் கடலில் மூழ்கியுள்ளது.

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

அனைத்து சமையல் எரிவாஞ உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு 12.5 கிலோகிராம் வீட்டுப் பாவனைக்கான சிலிண்டர்கள் நாடு முழுவதும் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று நுகர்வோர் அதிகார சபையினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...

கொரோனா காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்?

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடு வதனை தவிர்க்கவும்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக...

உலகின் பணக்கார கோவிலில் உள்ள ஆறாவது அறையின் மர்மம்..!

மேலும் இது தொடர்பான விபரங்களை காணொளியில் பார்க்கவும். https://youtu.be/zCVhOg6YkY8

துயர் பகிர்வு