Sunday, May 9, 2021

இதையும் படிங்க

சட்டம் ஒரு இருட்டறை! | மயூரனின் நினைவுகள் | ப. தெய்வீகன்

போதைப்பொருள் கடத்தல்காரனாக கைதுசெய்யப்பட்டு, சுமார் பதினொரு வருடங்கள் சிறைவைக்கப்பட்ட பின்னர், மரண தண்டனை தீர்ப்பு வழங்கியபோது "நான் திருந்திவிட்டேன், என்னை உயிரோடு வாழவிடுங்கள்" - என்று மன்றாட்டமாகக் கேட்டபோதும், அந்த...

அனர்த்த ரூபவ் பேரனர்த்த நீக்கத்திற்கான வாழ்தலைப் பேசும் சுசிமன் நிர்மலவாசனது ஓவிய இயக்கம்

கலாநிதி சி.ஜெயசங்கர் எந்த வகையிலான ஊடகங்களிலும் ரூபவ் எந்தவிதமான இடங்களிலும் ஓவியப் படைப்புக்களை காண்பியக்கலை ஆக்கங்களை உருவாக்கவும் ரூபவ் காட்சிப்படுத்தவுமான இயல்பு சுசிமன் நிர்மாலவாசனுக்குரியது. அவரது...

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சீனக் குடியேற்றமா?

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் அண்மைக்காலத்தில் சீனக் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டடு வரும் சிறுவர் பூங்கா தொடர்பாகவும் கட்டிடங்களில் எழுதப்பட்டு இருக்கும் சீன...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 34 | பத்மநாபன் மகாலிங்கம்

“உருத்திரபுரம் 10 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1950 ஆண்டும், உருத்திரபுரம் 8 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1952 ஆம் ஆண்டும் ஆரம்பமானது.” “உருத்திரபுரம் குடியேற்றத்திட்டம் கொடுக்கும்...

மலையக மக்கள் முன்னணிக்கு எதிரான ‘சதி’!

யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார்

ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் – முருகபூபதி

தமிழ்நாட்டிலிருந்து சினிமாவுக்காகவே வெளியான பொம்மை இதழில் பலவருடங்களுக்கு முன்னர் அதன் கேள்வி - பதில் பகுதியில் இவ்வாறு...

ஆசிரியர்

வத்திராயனில் ட்ராகன் | வடமராட்சியில் ஒரு சீனக் கிராமம் | நிலாந்தன்

இந்தவாரம் சீனப் பாதுகாப்பு மந்திரி இலங்கைக்கு விஜயம் செய்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் வத்திராயனில் ஒரு சிறுவர் பூங்காக்கட்டடம் சீனத்துக் கட்டடக் கலைச்சாயலோடு கட்டித் திறக்கப்படுகிறது. கட்டிடத்தின் உச்சியில் சீனத்து டிராகன் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது. கட்டடத்தில் சீன எழுத்துக்களும்  வரையப்பட்டிருக்கின்றன.இவை அனைத்தையும் செய்தவர் ஒரு புலம்பெயர்ந்த தமிழர். ஊருக்கு நல்லது செய்ய விரும்பிய அவர் அந்த கட்டடம் கட்டுவதற்கான நிதி உதவிகளை வழங்கியிருக்கிறார்.அவரே கட்டிடத்துக்கான வரைபடத்தையும் தீர்மானித்திருக்கிறார்.அது அவருடைய ரசனைத் தெரிவு.அதில் அரசியல் எதுவும் கிடையாது என்று சொல்லப்படுகிறது.அவருக்கோ அதைக் கட்டிய மேசனுக்கோ அல்லது சீன எழுத்துக்களை வரைந்த வண்ணம் பூசுபவருக்கோ தாம் என்ன செய்கிறோம் என்பதன் அரசியல் மற்றும் கலாச்சார பரிமாணங்கள் எவையும் தெரிந்திருக்கவில்லை.அதனால்தான் சீன எழுத்துக்களின் மத்தியில்  சமஸ்கிருதத்தில் ஓம் எழுதப்பட்டிருக்கிறது.

வத்திராயனில் கட்டப்பட்டிருக்கும் சீனத்து ட்ராகன் ஒரு புலம்பெயர்ந்த தமிழரின் கற்பனை.ஆனால் இந்தவாரம் கொழும்புக்கு விஜயம் செய்த சீனப் பாதுகாப்பு மந்திரியின் விடயம் அவ்வாறு ஒரு கற்பனை அல்ல.அதனாற்றான் அவர் நாட்டுக்கு விஜயம் செய்த அதே காலப்பகுதியில் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான தூதுவர்கள் எதிர்க் கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்திருக்கிறார்கள்.இதன் மூலம் சீனாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய யூனியன் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறது என்பது வெளிப்படையானது.அரசாங்கம் சீனாவை அதிகமாக நெருங்கிச் சென்றால் மேற்கு நாடுகள் எதிர்க்கட்சிகளை முன்னிலைப்படுத்தி மீண்டும் ஓர் அரசியல் விளையாட்டை விளையாடக்கூடும் என்ற ஊகங்களை இச்சந்திப்பு உணர்த்துகின்றதா?

எப்படியும் இருக்கலாம்.ஆனால் அரசாங்கம் இச்சந்திப்பு காரணமாக தனது சீனச் சாய்வைக் கைவிடும் என்று நம்பத் தேவையில்லை.ராஜபக்சக்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய யதார்த்தங்களை புறக்கணித்துவிட்டு ஓர் அணியின் பக்கம் போகிறார்கள் என்று தயான் ஜயதிலக்க போன்ற விமர்சகர்கள் எச்சரித்து வருகிறார்கள்.ஆனால் தயான் ஜெயதிலக கூறுவதை இந்த அரசாங்கம் விளங்கிக் கொள்ளாமல் இல்லை.இந்த அரசாங்கம் தான் என்ன செய்கிறேன் என்பதை நன்கு விளங்கித்தான் செய்கிறது.சில அரசியல் விமர்சகர்கள் நம்புவது போல அரசாங்கம் விளைவுகளை விளங்கிக் கொள்ளாமல் ஓர் ஆபத்தான விளையாட்டில் இறங்கி விட்டது என்பது உண்மை அல்ல.எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் அரசாங்கம் இந்த ஆட்டத்தில் இறங்கியிருக்கிறது.அதை இன்னும் ஆழமாக சொன்னால் இதை விட்டால் அரசாங்கத்துக்கு வேறு தெரிவுகள் இல்லை.ஏனெனில் ராஜபக்சக்கள் தங்கள் சொந்த வெற்றிகளின் கைதிகள்.

முதலாவது யுத்த வெற்றி.இரண்டாவது தேர்தல் வெற்றிகள். யுத்தத்திற்கு பின்னரான எல்லாத் தேர்தல்களிலும் அவர்கள் சிங்களபௌத்த பெருந்தேசிய உணர்வுகளைத்தான் தூண்டி வளர்த்தார்கள்.தனிச்சிங்கள வாக்குகளால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றதாக காட்டிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் இது.எனவே அந்த தேர்தல் வெற்றிகளின் இருந்து அவர்களால் பின்வாங்க முடியாது.சிங்களபௌத்த மக்களின் காவலனாக இந்த அரசாங்கம் தன்னை காட்டிக் கொள்கிறது.அந்த மக்களின் உணர்வுகளை திருப்திப்படுத்தும் ஓர் ஆட்சியைத்தான் நடத்த முடியும்.இப்படிப்பார்த்தால் ராஜபக்சக்கள் அவர்களுடைய சொந்த வெற்றிகளின் கைதிகள் எனலாம்.

அவர்களுடைய பலம் எதுவோ அதுதான் அவர்களுடைய பலவீனமும்.அவர்களுடைய பலங்கள் இரண்டு.முதலாவது யுத்ததத்தை வென்றது.இரண்டாவது அந்த யுத்தவெற்றியை பல தலைமுறைகளுக்கு உரிமை கோரக்கூடிய ஒரு பலமான குடும்பத்தை கொண்டிருப்பது.மு. திருநாவுக்கரசுவின் வார்த்தைகளில் சொன்னால் உலகில் அதிகம் தலைவர்களைக் கொண்டிருக்கும் குடும்பங்களில் ஒன்று அது.அக்குடும்பம் யுத்த வெற்றியை ஒரு குடும்பத்தின் சொத்தாக்கி அதையே தனது எதிர்கால அரசியலுக்கான முதலீடாகவும் மாற்றி வைத்திருக்கிறது.எனவே ராஜபக்சக்கள் முதலாவதாக அவர்களுடைய யுத்த வெற்றியின் கைதிகள்.இரண்டாவதாக யுத்த வெற்றியை அவர்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் அப்டேட் பண்ணி தேர்தல்களில் வென்று வருகிறார்கள்.எனவே அந்த தேர்தல் வெற்றிகளின் கைதிகள்.

இந்தப்பின்னணியில் வைத்துத்தான் ரிசாத் பதியுதீனின் கைதை விளங்கிக்கொள்ள வேண்டும்.கடந்தகிழமை முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி ஆடை அணிவதைத் தடைசெய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதையும் அவ்வாறே விளங்கிக்கொள்ள வேண்டும்.

எனவே இந்த அரசாங்கம் தனது வெளியுறவுக் கொள்கையின் விளைவுகளை விளங்கிக் கொள்ளாமல் களத்தில் இறங்கியுள்ளது என்று கருதுவது இந்த அரசாங்கத்தின் தன்மையை குறிப்பாக ராஜபக்ச ஆட்சியின் அடிப்படைகளை விளங்கிக் கொள்ளாத ஒரு விமர்சனம்தான்.அதைப்போலவே ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையே முரண்பாடுகள் வரலாம் என்று நம்புவதும் கற்பனை அதிகம் உடைய ஓர் ஊகம்தான். அதைப்போலவே தாமரை மொட்டு கட்சியின் பங்காளிகளான விமல் வீரவன்ச,உதய கம்மன்பில,ஆனந்த முருத்தெட்டுவ தேரர் போன்றோர் அரசாங்கத்துடன் முரண்படுவதை வைத்து அக்கட்சி உடைந்து போய்விடும் என்று நம்புவதும் காலத்தால் முந்திய ஒரு எதிர்பார்ப்புதான்.இவை மட்டுமல்ல மகிந்த ராஜபக்சவின் காலத்தில் 2015இல் நடந்தது போல ஒரு ஆட்சி மாற்றத்தை இனிமேலும் இலகுவாக நடத்தி முடிக்கலாம் என்று எதிர்பார்ப்பதும் விருப்பங்களின் அடிப்படையிலான காலத்தால் முந்திய ஒரு  கணிப்புத்தான்.

ஆழமான பொருளில் சொன்னால் ராஜபக்சக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்படி ஒரு தடத்தில்தான் அவர்களுடைய வெளியுறவுக்கொள்கை அமைய முடியும்.ஏனென்றால் யுத்த வெற்றிதான் அவர்களுடைய ஒரே முதலீடு.யுத்த வெற்றிக்கு தலைமை தாங்கும் ஓர் அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைக்க முடியாது. போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வில்லை என்றால் மேற்கு நாடுகளை நெருங்கிச் செல்ல முடியாது.ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிகப் பலமான தமிழ் டயஸ்போரா உண்டு.இந்தியாவில் எட்டுக்கோடி தமிழர்கள் உண்டு.எனவே பலமான தமிழ்ச்சமூகங்களைக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளை இந்த அரசாங்கம். ஒரு கட்டத்துக்கு மேல் நெருங்கிச் செல்ல முடியாது என்பது ஒரு ராஜபக்ச யதார்த்தம்.குறிப்பாக போர்க்குற்ற விசாரணைகள் பொறுத்து அதிலும் குறிப்பாக ஐநா தீர்மானம் பொறுத்து ஒரு கட்டத்துக்கு மேல் மேற்கு நாடுகளுடன் இணங்கிப் போக முடியாது என்பதும் ஒரு ராஜபக்ச யதார்த்தம்.எனவே இந்த யதார்த்தங்களின் விளைவாக அவர்கள் சீனாவை நோக்கி செல்வதைவிட வேறு தெரிவுகள் இல்லை.

சீனாவில் பலமான தமிழ்ச்சமூகம் இல்லை.செல்லத் தமிழ்பேசும் சில சீன அழகிகள் மட்டும் உண்டு.இது ஒரு காரணம்.இரண்டாவது காரணம்-சீனா கடனோ உதவியோ வழங்கும் பொழுது அதற்கு மனித உரிமைகளை ஒரு முன் நிபந்தனையாக முன்வைப்பதில்லை.மூன்றாவது காரணம் சீனா ஐநாவில் இலங்கை அரசாங்கத்தை நிபந்தனையின்றி பாதுகாக்கும் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நாலாவது காரணம் சீனாவின் பட்டியும் பாதையும் வியூகத்தில் ஸ்ரீலங்கா எப்பொழுதோ இணைக்கப்பட்டு விட்டது. ஸ்ரீலங்கா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிலிருந்து விடுபடுவது கடினம்.2015இல் ஆட்சி மாற்றத்தின் பின் வந்த சீனாவுக்கு அதிகம் நெருக்கம் இல்லாத ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அதை நிரூபித்தது.சீனாவின் கடன் பொறிக்குள் இருந்து இலங்கைதீவை மீட்கும் சக்தி இலங்கைதீவில் இனி வரக்கூடிய எந்த ஒரு உள்நாட்டு அரசாங்கத்துக்கும் கிடையாது.

இதுதான் மாலைதீவுகளின் நிலையும்.மாலைதீவுகள் சீனாவிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கு அந்நாட்டின் ஆளற்ற  தீவுகளில் ஒன்றை விற்க வேண்டியிருக்கும் என்று ஒர் இந்திய பாதுகாப்புத்துறை விமர்சகர் தெரிவித்திருக்கிறார்.சீனாவை பொறுத்தவரை அதன் பட்டியும் பாதையும் திட்டத்தில் இலங்கைத் தீவுக்கு இன்றியமையாத ஒரு முக்கியத்துவம் உண்டு. எனவே இலங்கைத் தீவு விரும்பினாலும் சீனா தன் பிடிக்குள் இருந்து இச்சிறிய தீவை இலகுவில் கழண்டு போக விடாது. அதிலும் குறிப்பாக 2018ஆம் ஆண்டு மாலத்தீவுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தோடு அத்தீவுக்கூட்டம் ஒப்பீட்டளவில் சீனாவின் கைகளுக்குள் இருந்து சற்று தூரமாக சென்று விட்டது.அது முழுவதுமாக சீனாவிடம் இருந்து விடுபட முடியாதபடிக்கு சீன கடன் பொறிக்குள் சிக்கியிருக்கிறது.எனினும் அரசியல் ரீதியாக அது இப்பொழுது இந்தியாவுக்கு நெருக்கமாக வந்திருக்கிறது.எனவே மாலத்தீவுகளில் நடந்ததுபோல இனிமேலும் சிறிலங்காவிலும் நடக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை சீனாவிடம் இருக்கும்.

இந்த அடிப்படையில் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ராஜபக்சக்கள் சீனாவை நோக்கி போனமை என்பது அவர்களைப் பொறுத்தவரை வேறு தெரிவுகள் இல்லாத ஒரு நிலைதான்.ஏனெனில் அவர்கள் இறந்த காலத்தின் கைதிகள்.  அதிலிருந்து அவர்கள் விரும்பினாலும் வெளிவர முடியாது.

தமிழில் ஒரு கிராமியக் கதை உண்டு.இரண்டு நண்பர்கள் ஆற்றங்கரைக்கு போனார்கள்.ஆற்றில் ஒரு பொதி மிதந்து வரக் கண்டார்கள். நண்பர்களில் ஒருவன் அந்த பொதியை அடைய விரும்பி ஆற்றில் இறங்கினான். நீந்திச்சென்று பொதியை கரைக்கு கொண்டுவர முயற்சித்தான். ஆனால் நீண்ட நேரமாக முயற்சித்தும் அவனால் பொதியை கரைக்குக் கொண்டு வர முடியவில்லை.கரையில் நின்றவன் கத்தினான் “முடியவில்லை என்றால் அதை விட்டுவிட்டு நீ திரும்பி நீந்தி வா” என்று. அதற்கு ஆற்றில் நின்றவன் கூறினான் “நான் அதை எப்பொழுதோ விட்டுவிட்டேன் ஆனால் அதுதான் என்னை விடுகுதில்லை” என்று.ஏனென்றால் அவன் பஞ்சுப்பொதி என்று நினைத்துப் பிடித்தது வெள்ளத்தில் அள்ளப்பட்டு வந்த ஒரு கரடியை. இப்பொழுது இலங்கைத்தீவின்  நிலையும் சீனா பொறுத்து அப்படித்தானா? ட்ரகனைப் பிடித்தவனின் நிலை? நிச்சயமாக அந்த ட்ராகனும் வத்திராயனுக்கு வந்த ட்ராகனும் ஒன்றல்ல.

நிலாந்தன்

இதையும் படிங்க

யாழ்ப்பாணத்தின் வரவேற்பு ‘நல்லூர் வளைவு’

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பெருமையை அடையாளப்படுத்தும் வண்ணமும் யாழ்ப்பாணத்தின் “கந்தபுராணக் கலாசாரத்தினை” உலகிற்கு...

மணிவண்ணன் மேற்கொண்ட நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானதா?

யாழ்.மாநகரத்தினை தூய்மைப்படுத்தல் தொடர்பில் மாநகர முதல்வர் வி;.மணிவண்ணன் எடுத்த நடவடிக்கைகள் சில அண்மையில் பல சர்ச்சைகள், மற்றும் மாநகர சபையின் அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தும்...

கடற்புலிகளின் கதை!

உலக அளவில் தனக்கென கடற்பிரிவு வைத்திருந்த ஒரே இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்தான். உலகின் மிகவும் புகழ்வாய்ந்த...

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 35 | பத்மநாபன் மகாலிங்கம்

இலங்கையும் இந்தியாவும் சுதந்திரம் அடையும் வரை இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மக்கள் போய் வந்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், முறையான 'பாஸ்போர்ட்' (Passport), 'விசா' (Visa) இன்றி...

இயந்திரத்திற்குள் இயைந்துபோகின்ற அருவிவெட்டு..!

ஊர்கூடித் தேரிழுத்த காலம் காணாமற்போனது போல ஊர் கூடி அருவி வெட்டின காலமும் காணுவதற்கு அரிதாக உள்ளது. இயந்திர உலகில் எல்லாமும் மறைந்து மறந்து செல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்! | சந்திரவதனா

தலைவர் உபசரிப்பில் #டுபாய்பிட்டு நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு...

தொடர்புச் செய்திகள்

கொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதல்வர்களுடன் தனிதனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- தீவிர கண்காணிப்பு!

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை...

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஆப்கான் பாடசாலைக்கு அருகில் குண்டுத் தாக்குதலில் 55 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு வெளியே சனிக்கிழமை இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 55 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திரிபடைந்த கொரோனா வைரஸ் உள்நுழைவதைக் கட்டுப்படுத்த சிறந்த சுகாதார நடவடிக்கை தேவை!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை  உள்ளடக்கியதாக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் மனுவொன்றை வெளியிட்டிருப்பதுடன் அதில் கையெழுத்திடுமாறு பொதுமக்களைக்...

சீன ரொக்கெட்டின் பாகங்கள் பூமியில் வீழ்ந்தன!

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் மிகப்பெரிய ராக்கெட்டின் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்துள்ளன. ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தவுடன் அதன் பெரும்பகுதி...

மேலும் பதிவுகள்

குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்ட பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியல் பிரபலம்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்கள் தான் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி.

ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் கொரோனாவால் மரணம்!

ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங் தனது 82ஆவது வயதில் காலமானார். கடந்த மாதம் குருகிராமில்...

ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் வெளியிட்ட கொரோனா விழிப்புணர்வு வீடியோ

ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி...

வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள விசேட தமிழ் அதிகாரி

பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு, கிழக்கு மாகாணத்தின் விசேட அதிகாரியாக கீதனாத் காசிலிங்கத்திற்கு பிரதமரால் மேலதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை

தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்ட மறைந்த நடிகை சித்ராவின் புகைப்படத்திற்கு கேக் ஊட்டி அவரது தந்தை கண்கலங்கி இருக்கிறார்.சித்ராபிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல...

ஒலிம்பிக் போட்டிகளில் வரலாறு படைக்கவுள்ள திருநங்கை

டோக்கியோ விளையாட்டுக்கு தகுதி பெறுவதன் மூலமாக ஒலிம்பிக்கில் பங்கேற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பளு தூக்குதல் வீரர் லாரல் ஹப்பார்ட் பெறவுள்ளார்.

பிந்திய செய்திகள்

கொரோனாவின் கோலாட்டம்: 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லி: கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதல்வர்களுடன் தனிதனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- தீவிர கண்காணிப்பு!

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை...

அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல்...

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு மலேசியா பயணத்தடை!

இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மே எட்டாம் திகதி முதல் மலேசியாவிற்குள் உள்நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு!

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4 மணி வரை...

அமெரிக்காமர்ம நபர்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு!

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதலில்...

துயர் பகிர்வு