தனது மகனின் இளம் வயது திருமணத்திற்கு மகாத்மா காந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் அரசு ஆவண காப்பகம்மூலம் கிடைத்த ஆவணங்களை வரலாற்றுநிபுணர் ரிஸ்வான் காத்ரி என்பவர் ஆய்வு செய்து வெளியிட்டார்.
அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாவது, தேசப்பிதா மாகாத்மா காந்தி. இவர் 13- வயதில் கஸ்தூரிபாயை மணந்தார். இந்நிலையில் இவரது மூத்த மகன் ஹிராலால் காந்தி (1888-1948) இவருக்கு 1906-ம் ஆண்டு மே 2-ம் தேதி 19 வயதில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்ப்டடிருந்தது. அப்போது காந்தி தென் ஆப்ரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். காந்தியின் மூத்த சகோதரர் லக்ஷமிதாஸ் கரம்சந்த் காந்தியின் பாதுகாப்பில் இருந்த ஹிராலால்காந்தியின் திருமணத்திற்கான அழைப்பிதழ் கையால் எழுதி காந்திக்கு தென்ஆப்ரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருமண அழைப்பிதழை பார்த்த காந்தி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பால்ய விவாகம் செய்வது தவறு என்பதை முன்னர் தான் உணராமல் போனதால் தான் பால்ய விவாகம் செய்து மிகவும் கவலையடைந்ததாகவும், அது போன்ற நிலைமை தனது மகனுக்கு வரக்கூடாது என்பதால் பால்ய விவாகத்தினை நிறுத்துமாறு பதில் கடிதம் மூலம் சகோதரர் லக்ஷிதாஸ் கரம்சந்த் காந்திக்கு எழுதினார்.. ஆனாலும் குறிப்பிட்ட தேதியில் திருமணம் நடந்துவிட்டது. திருமணம் செய்த ஹிராலால் காந்தி 1948-ம் ஆண்டு நுரையீரல் கோளாறால் இறந்தார். இவ்வாறுஅந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
அதே போன்று மற்றொரு ஆவணத்தில், ஹிராால் காந்தி லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற விரும்பியதாகவும், ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வரும் நாம் அவர்கள் தரும் பட்டம் எதற்கு என ஹிராலால் காந்தியின் மேற்படிப்புக்கு தடைப்பட்டதாகவும், இதனால் காந்தியுடன் கருத்துவேறு ஏற்பட்டு 1911-ம் ஆண்டு தந்தை (காந்தி) யுடான உறவை மகன் ஹிராலால் துண்டித்ததாகவும் பின்னர் மதமாற்றம்செய்து அப்துல்லா காந்தி என தன் பெயரை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
நன்றி : இன்று ஒரு தகவல் | தமிழ் நேசன்