May 31, 2023 5:06 pm

கடலுக்குள் இடிந்து விழுந்த அருங்காட்சியகம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கடலுக்குள் இடிந்து விழுந்த அருங்காட்சியகம்

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள அருங்காட்சியகம் (மியூசியம்) ஒன்று கடலுக்குள் இடிந்து விழுந்துள்ளது.

எல் ஓரோ மாகாணத்தின் கடலோரப் பகுதியில் புவேர்ட்டோ, பொலிவர் மரைன் மியூசியம் செயல்பட்டு வந்தது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த மியூசியத்தில், குறைந்தது 5,000 கடல் கலைப்பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தால், அருங்காட்சியகம் இடிந்து கிட்டத்தட்ட முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், மூழ்கிய அருங்காட்சியகத்தில் இருந்து கலைப்பொருட்களை உள்ளூர் மக்கள் படகுகளில் மீட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி : ஈக்குவடோரில் நிலநடுக்கம்; 14 பேர் உயிரிழப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்