ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறன.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ரஷிய ஜனாதிபதி பூட்டின், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ஒடிசா ரயில் விபத்து செய்தியை அறிந்ததும் இதயமே நொறுங்கிவிட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
“பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன். இந்த வருத்தமான சூழ்நிலையில் இந்தியர்களுடன் அமெரிக்க மக்கள் துணை நிற்பதாக” ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.