செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஒடிசாவில் மேலுமொரு ரயில் விபத்து

ஒடிசாவில் மேலுமொரு ரயில் விபத்து

0 minutes read

கோரமண்டல் கடுகதி ரயில் விபத்துக்குள்ளான ஒடிசாவின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்றின், ஐந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்து, ஒடிசா மாநிலம், பர்காஹ் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை பயணித்த கோரமண்டல் கடுகதி ரயில், ஒடிசா மாநிலத்தின் பாலசோா், பஹாநகா் ரயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் 280 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.