செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஊசி விஷமாகியது; 100ற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உயிரிழப்பு

ஊசி விஷமாகியது; 100ற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உயிரிழப்பு

0 minutes read

இந்தியா – ஆந்திர மாநிலத்தில் நாய்களுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்ட நிலையில் 100ற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், பல நாடு மாவட்டம், முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதற்கு தீர்வு காணக் கோரி, பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாய் தொல்லையை தடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்

எனினும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் இந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிக்கு பதிலாக தவறான ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, 100ற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உயிரிழந்துள்ளன.

இதனால் பணியில் அலட்சியம் காட்டியதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் ஹேமாவதி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மேலும், 3 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.