December 2, 2023 2:58 pm

கனடாவில் வெள்ளம்; இரு சிறுவர்கள் உட்பட மூவர் மரணம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
கனடாவில் வெள்ளம்

கனடாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மரண எண்ணிக்கை 3ஆக அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) உள்ள தங்களது வீட்டை விட்டு வெளியேறச் சிறுவர்கள் முயன்றபோது அவர்களை ஏற்றியிருந்த வாகனம் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது. குறித்த காரில் இருந்த மேலும் 3 பேர் உயிர்தப்பினர்.

அதே போன்ற சூழ்நிலையில் காணாமல் போன 52 வயது ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களில் பெய்யக்கூடிய மழை கடந்த வாரத்தில் சில மணி நேரத்துக்குள் கொட்டித்தீர்த்ததை அடுத்து வாகனங்கள், பாலங்கள் மற்றும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின.

தற்போது வெள்ள நீர் வடியத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், சில இடங்களில் வெள்ளம் நீடிக்கிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்