செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கனடாவில் G7 உச்சி மாநாடு; இந்தியப் பிரதமர் மோடிக்கு அழைப்பு!

கனடாவில் G7 உச்சி மாநாடு; இந்தியப் பிரதமர் மோடிக்கு அழைப்பு!

1 minutes read

கனடாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீக்கியப் பிரிவினைவாதி கொல்லப்பட்ட சம்பவத்தில் கனடா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், இவ்வாண்டுக்கான G7 உச்சி மாநாடு கனடாவில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த அமைப்பின் உச்சி மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகள் பங்கேற்பது வழக்கம். 2022இல் ஜெர்மனியில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும், 2023இல் ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டிலும் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் செயல்திட்டங்கள் வகுப்புக் கூட்டத்திலும் பிரதமர் இந்தியப் மோடி பங்கேற்றார்.

இவ்வாண்டுக்கான G7 மாநாட்டில் பங்கேற்க, இந்தியாவுக்கு கனடா தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்படாமல் இருத்தது. ஆனால், கனடா பிரதமர் மார்க் கார்னி தற்போது மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காலிஸ்தான் பயங்கரவாத விவகாரத்தால், பிரதமர் மோடி கனடாவில் G7 மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியான நிலையிலேயே மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

சட்ட அமலாக்கக் கலந்துரையாடலைத் தொடர்வதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதாகக் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார். பல விநியோகச் செயல்பாடுகளில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளதாகவும் கனடா பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, குறித்த மாநாட்டிற்கு இந்தியாவையும் அழைக்கும்படி, பிற உறுப்புநாடுகள் கனடாவிற்கு நெருக்கடி கொடடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

G7 அமைப்பானது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் கனடா உள்ளிட்ட அபிவிருத்தியடைந்த நாடுகளை உள்ளடக்கியதாகும்.

இந்த நாடுகளிடையேயான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விடயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக G7 செயல்பட்டு வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.