இவ்வாண்டுக்கான G7 உச்சி மாநாடு, கனடாவில் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகி இன்று 17ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், G7 உச்சி மாநாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஈரான் – இஸ்ரேலுக்கு இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், அவர் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்தி : கனடாவில் G7 உச்சி மாநாடு; இந்தியப் பிரதமர் மோடிக்கு அழைப்பு!
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப், இன்று (17) அமெரிக்காவுக்கு புறப்படுவார் என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
G7 அமைப்பானது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் கனடா உள்ளிட்ட அபிவிருத்தியடைந்த நாடுகளை உள்ளடக்கியதாகும்.
இந்த நாடுகளிடையேயான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விடயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக G7 செயல்பட்டு வருகிறது.