அமெரிக்கப் பொருள்கள் மீது அறிவித்துள்ள வர்த்தக வரிகளை 6 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருக்கிறது.
சுமார் 109 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்கள் மீது வர்த்தக வரிகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் ஆகியோர் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
அதன்படி, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பெரும்பாலான ஐரோப்பியப் பொருள்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
Microchips, மருந்துப்பொருள்கள் மற்றும் வாகனங்கள் போன்ற முக்கிய துறை சார்ந்த பொருள்களுக்கு அது பொருந்தும். தற்போது அவற்றுக்கு 25 சதவீத வரி அறவிடப்படுகிறது.
15 சதவீத வரி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்நிலையிலேயே, அமெரிக்கப் பொருள்கள் மீது அறிவித்துள்ள வர்த்தக வரிகளை இடைநிறுத்தி வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருக்கிறது.