செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ‘கடுமையான அபாயங்கள்’ காரணமாக இலண்டனில் ஈரான் ஆதரவு பேரணிக்கு தடை

‘கடுமையான அபாயங்கள்’ காரணமாக இலண்டனில் ஈரான் ஆதரவு பேரணிக்கு தடை

1 minutes read

வார இறுதியில் இலண்டனில் நடைபெறவிருந்த ஈரான் சார்ப்பு பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  “பெரும் பொது கலவரத்தை தடுப்பதற்காக” மெட்ரோபொலிடன் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தத் தீர்மானம் “பேரணியின் பரப்பு மற்றும் பல எதிர்ப்பேரணிகள்” காரணமாக எடுக்கப்பட்டதாகவும், வீதி போராட்டம் அனுமதிக்கப்படும், ஆனால் அதற்கு கடுமையான பொலிஸ் பாதுகாப்பு அமுல்படுத்தப்படும்” என்று மஹ்மூத் கூறியுள்ளார்.

இந்த பேரணி அல்குத்ஸ் தினத்தை (Al Quds Day) நினைவுகூரும் வகையில் நடைபெறும், இது ரமழான் முடிவின் முன் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வாகும்.

ஆனால், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமெனேயியை (Ali Khamenei) ஆதரிக்கும் வகையில் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்ததால், இந்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இஸ்லாமிய மனித உரிமை ஆணைக்குழு (Islamic Human Rights Commission – IHRC) இந்த பேரணியை தடை செய்த முடிவை கண்டித்து, காமெனேயி “வரலாற்றின் சரியான பக்கத்தில் நின்றவர்” எனக் கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.