செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் தலைமை மாற்ற விவாதங்களுக்கு மத்தியில் புதிய திருப்பம் – பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த கேத்தரின்!

தலைமை மாற்ற விவாதங்களுக்கு மத்தியில் புதிய திருப்பம் – பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த கேத்தரின்!

1 minutes read

பிரதமர் கியர் ஸ்டார்மர் ஆற்றிய முக்கிய அரசியல் உரைக்கு பின்னர், தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கேத்தரின் அட்கின்சன் அவருக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளார்.

பிரதமரின் உரை குறித்து கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தீவிரத்தை பிரதமர் நன்கு புரிந்துகொண்டிருப்பது அவரது உரையில் தெளிவாக வெளிப்பட்டது” என கூறியுள்ளார். குறிப்பாக, நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி தொடர்பாக பிரதமர் எடுத்துக்காட்டிய அணுகுமுறை மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வாக்காளர்கள் வெளிப்படுத்திய அதிருப்தியை பிரதமர் கவனமாகக் கேட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலளிக்கும் வகையில் புதிய அரசியல் நம்பிக்கையையும் திசையையும் முன்வைத்துள்ளதாகவும் கேத்தரின் குறிப்பிட்டார்.

அதோடு, வலிமையானதும் நியாயமானதுமான இங்கிலாந்தை உருவாக்கும் பிரதமரின் முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தொழிற்கட்சிக்குள் தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான தொழிற்கட்சி எம்.பி.க்கள் தற்போதைய பிரதமருடன் இணைந்து செயல்பட விரும்புகின்றனர் என்றும் கேத்தரின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தொழிற் கட்சியின் மற்றொரு முக்கிய உறுப்பினரான கேத்தரின் , பிரதமர் கியர் ஸ்டார்மருக்கு எதிராக தலைமைப் போட்டியை தொடங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.