செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பயங்கரவாதிகள் சுட்டதில் பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் பலி!

பயங்கரவாதிகள் சுட்டதில் பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் பலி!

0 minutes read

தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிய பொலிஸார் இராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளமை குறிப்பிடதக்கவிடயம்.

இந்நிலையில் கந்தகார் மாகாணத்தில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மரோப் மாவட்டத்தில் பொலிஸார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் பொலிஸாரின் வாகனங்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பொலிஸார் உடனடியாக பதில் தாக்குதலை தொடுத்தனர்.

இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் சுட்டதில் பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 9 பொலிஸார் படுகாயம் அடைந்தனர்.

அதே சமயம் பயங்கரவாதிகள் தரப்பில் 15 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.