பாக்கிஸ்தானில் எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பொது தேர்தலில், 4 கோடியே 60 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இம்முறை தேர்தலில் இளம் வாக்காளர்களின் பங்கு அதிக அளவில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், இம்ரான் கான், தற்போதைய பிரதமர் அப்பாசி மற்றும் முன்னாள் ஜனாதிபதி அசிப் அலி சர்தாரி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் மொத்தமாக 10 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக பாக்கிஸ்தான் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
