செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சீனாவின் சிச்சுவான் பகுதியில் தீ விபத்து 19 பேர் பலி!

சீனாவின் சிச்சுவான் பகுதியில் தீ விபத்து 19 பேர் பலி!

1 minutes read

 

சீனாவின் தென் மேற்கு மாகாணமான சிச்சுவான் பகுதியில் உணவு மற்றும் மருத்துவ தொழிற்துறைகளுக்கான இரசாயனங்களை தயாரிக்கும் தனியார் இரசாயன ஆலை ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த ஆலையில் 11.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ ஆலையின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியதால் எங்கும் புகைமூட்டம் காணப்பட்டது.

இதனிடையே, ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்தவர்களில் ஒரு பெண் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவின் டியாஜின் மாகாணத்தில் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 165 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.