செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா சிரியா அதிபர் சிரியா கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல் 30 பொதுமக்கள் பலி!

சிரியா அதிபர் சிரியா கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல் 30 பொதுமக்கள் பலி!

0 minutes read

 

சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகள் சிரியா கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படையும் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது சிரியாவின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப் படைகள் சமீபகாலமாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.

இட்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாளான நேற்றும் சற்று கிழக்கை நோக்கி முன்னேறி சென்று வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

அலெப்போவிற்கு அருகில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 30 பேர் பலியானதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.