செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா “சசிகலா அரசியலுக்கு வரலாம்”!

“சசிகலா அரசியலுக்கு வரலாம்”!

0 minutes read

”சசிகலா அரசியலுக்கு வரலாம்” என தி.மு.க. மகளிர் அணி செயலர் கனிமொழி கூறியுள்ளார்.

பழைய தர்மபுரியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ தமிழக அளவில் 85 சதவீதமாக உள்ள கல்வியறிவு தர்மபுரி மாவட்டத்தில் 67 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தன் மாவட்டத்தில் எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதை அறியலாம்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பது பன்னீர்செல்வத்தின் கனவு. அவர்களது கட்சியில் உள்ள குழப்பங்களை சரி செய்தால் ஓரளவுக்காவது வெற்றி பெறுவதை பற்றி சிந்திக்கலாம்.

யார் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அக்கட்சியின் முடிவு. சசிகலா அரசியலுக்கு வரலாம். வேண்டாம் என நான் கூறவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.