Saturday, July 24, 2021

இதையும் படிங்க

இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரை 61 டெல்டா வகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்… சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தனது 45வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஒலிம்பிக்கில் கொரோனா பரிசோதனைக்கு எச்சிலை துப்பிக் கொடுத்தால் போதும்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விழாவுக்கு வருகைத தந்துள்ள அனைவருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகன்றது.  இதில் எவருக்கேனும்...

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம்!

இந்தியாவில் டெல்டா வைரஸின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாகவும், இதர வைரஸ்கள் குறைந்து விட்டதாகவும் இன்சாகாக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த ஆய்வறிக்கையில், உலகளவில் டெல்டா வைரஸ்...

யாழ்ப்பாணத்தில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி!

கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்,...

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

ஆசிரியர்

பிளஸ் 2 தேர்வுகள் ரத்து – நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் ரத்தாகுமா?

புதுடெல்லி:  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு  ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகம்  உட்பட பல மாநிலங்கள் 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளன. இதனால், ‘நீட்’ உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக,  மறு ஆய்வு கூட்டத்தை நடத்த தேசிய தேர்வு முகமை  முடிவு செய்துள்ளது. விரைவில் நுழைவுத் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று  இரண்டாம் அலையின்  பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு  சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு  கடந்த 1ம் தேதி அறிவித்தது. மத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றி  உத்தரகாண்ட், ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உட்பட 10  மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தின்கீழ் நடக்கும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வை ரத்து செய்தன.  தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்ச்சியை  எந்த வகையில்   நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர்  கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வு  கட்டுப்பாட்டு அலுவலர்  சயாம் பரத்வாஜ் வெளியிட்ட அறிவிப்பில், ‘கொரோனா   பரவல் காரணமாக மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தெரிவித்த கருத்துகளின்   அடிப்படையில் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு   செய்யப்பட்டது. எனவே, இந்தாண்டு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு   நடத்தப்படாது. மேலும், அந்த மாணவர்களுக்கு எந்த வகையில் தேர்ச்சியை மதிப்பீடு செய்யலாம்  என்பது குறித்து ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்து,  மத்திய கல்வி மற்றும் எழுத்தறிவுத்   துறையின் இணைச் செயலர் விபின் குமார், தலைமையில்  12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு தனது அறிக்கையை அடுத்த 10 நாட்களில்   சமர்ப்பிக்கும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கிடையே, தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தின்  கீழ், பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து  மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பொதுமக்களிடம் நேற்று  முன்தினம்   வரை ஆலோசனை நடத்தியது. பெரும்பாலானவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். ‘மாணவர்,  பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர், மருத்துவர்கள்  உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக  இந்தாண்டு பிளஸ் 2  வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் மட்டுமே உயர்கல்விக்கான தகுதியாக கருதப்பட  வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

ஆயினும் மாணவர்களின்  உடல்நலம் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்துத்  தரப்பினரும் உறுதியாக இருப்பதால் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து  செய்யப்படுகிறது.  மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு  செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்.  இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு,  அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும்’  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மாநில பாடத்திட்டத்திலான பிளஸ் 2  பொதுத்  தேர்வை தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள்  ரத்து செய்துவிட்டதால், மருத்துவக்  கல்விக்கான நுழைவு தேர்வான ‘நீட்’ உள்ளிட்ட தேர்வுகளையும் ரத்து செய்ய  வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசிடம் கோரி வருகின்றன.


 முன்னதாக, ஜேஇஇ – மெயின் நுழைவு தேர்வு கடந்த  ஏப்ரல் மாதத்திலும், நீட் நுழைவு தேர்வு மே மாதத்திலும் நடத்துவதாக திட்டமிட்டு இருந்த நிலையில்,  கொரோனா தொற்று  பரவல் அச்சம் காரணமாக, இரு நுழைவு  தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைக்கப்பட்டன. இருப்பினும்,  பொறியியல் நுழைவுத் தேர்வு ஜே.இ.இ  மெயின் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு நீட் ஆகிய இரண்டும் வரும்  ஆகஸ்டில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேற்கண்ட இரு தேர்வுகளையும்,  கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நடத்த முடியுமா என்பதை தீர்மானிப்பதற்கான தேசிய தேர்வு முகமையின்   மறுஆய்வுக் கூட்டம், விரைவில் நடக்கவுள்ளது. அடுத்த 15 நாளில் தேர்வு  நடத்துதல் அல்லது ரத்து செய்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

 மாணவர்களின் நலன் கருதி, நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று,  நாடு முழுவதும் பெரும்பாலான அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் வலியுறுத்தி  வருகின்றனர். அதனால், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ரத்து  செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்ச்சியை அறிவிக்கவும், மதிப்பீடுகள் செய்யவும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்  தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பை  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்க உள்ளார்.

ஜேஇஇ – மெயின் நுழைவு தேர்வு கடந்த  ஏப்ரல் மாதத்திலும், நீட் நுழைவு தேர்வு மே மாதத்திலும் நடத்துவதாக  திட்டமிட்டு இருந்த நிலையில், கொரோனா தொற்று  பரவல் அச்சம் காரணமாக, இரு  நுழைவு  தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைக்கப்பட்டன. மேற்கண்ட இரு தேர்வுகளையும்,  கொரோனா  அச்சத்துக்கு மத்தியில் நடத்த முடியுமா என்பதை தீர்மானிப்பதற்கான தேசிய  தேர்வு முகமையின்  மறுஆய்வுக் கூட்டம், விரைவில் நடக்கவுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2  தேர்ச்சியை மதிப்பீடு செய்ய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னைப்  பல்கலைக் கழக துணை வேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு  அமைக்கப்படுகிறது.

இதையும் படிங்க

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...

வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் – சார்பட்டா வில்லன்

ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் சார்பாட்டா படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன், அஜித் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கும் வி.கே.சிங்!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்...

அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது தென்னாபிரிக்கா!

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-0...

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியாவில் தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,651 பேருக்கு...

மேலும் பதிவுகள்

மறந்து விட்டோமா ஆடிப்பிறப்பு திருநாளை??

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ளா காணொளியை பார்க்கவும். https://youtu.be/cpSLtpmqEmo

இலங்கை அதிபர், ஆசிரியர் சங்கங்கள் கொழும்பில் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுக்கவுள்ளன. இந்த ஆர்ப்பாட்டப்...

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி இன்று!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை...

இலங்கை ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம்!

இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள இக் கூடடத்தில்எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் மீண்டும் பயணக்கட்டுப்பாடு!

பொதுமக்கள் எதிர்வரும் வார இறுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டால், கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டி வருமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் ஒரு தனி மனிதன் போராட்டம்..!

மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும். https://youtu.be/xcU0w013_Jk

பிந்திய செய்திகள்

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...

வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் – சார்பட்டா வில்லன்

ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் சார்பாட்டா படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன், அஜித் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

துயர் பகிர்வு