செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானில் தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

0 minutes read

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 100 இந்தியர்கள் மற்றும் 200 இற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தொண்டு நிறுவனங்கள் மத்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.

குறித்த கடிதத்தில், “காபூலில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்கானியர்களிடம் இருந்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் சீக்கிய தலைவர்களுக்கு உதவி கேட்டு தொலைப்பேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அவர்களுக்கு முறையான விசா உள்ளது. ஆனால் மின்னணு விசா கிடைக்கவில்லை. சுமார் 100 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்கானிஸ்தானியர்கள் 222 பேர் இந்திய அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

இந்துக்கள், சீக்கிய சமுதாயத்தினர் உள்ளிட்டவர்களுக்கு விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னர் எழுந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.