செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும்!

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும்!

0 minutes read

வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்கள் விரைவில் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் கடன் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், வங்கி மோசடி நடத்தி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்றவர்களை நாட்டிற்கு திருப்பி கொண்டுவர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு நடவடிக்கைகள் மூலம், வங்கி மோசடியாளர்களிடம் இருந்து இதுவரை 5 இலட்சம் கோடி அளவுக்கு கடன் திரும்ப வசூலித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் எப்போது வருவார்கள் என காத்திருக்காமல், வங்கிகள் வாடிக்கையாளர்களை தேடிச் சென்று கடன் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.