September 21, 2023 1:20 pm

இந்தியாவின் கொரோனா நிலைமை!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை), சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 9 ஆயிரத்து 481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 621 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1 இலட்சத்து 5 ஆயிரத்து 691 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் 82 இலட்சத்து 86ஆயிரத்து 058 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்