இந்தியா -மேற்கு வங்கத்தில் இடம் பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!

இறுதி சடங்கின் போது சடலம் ஒன்றை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தில் 35 பேர் சென்றிருந்த நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏனையோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்