செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் லண்டன் மேயர்!

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் லண்டன் மேயர்!

1 minutes read


இலங்கை கண்டியைப் பூர்வீகத்தை கொண்ட ஒருவர் லண்டனில் ஹாரோ பகுதியின் மேயராக கரீமா மரிக்கார் (Kareema Marikar) என்ற பெண் முதன் முறையாக மேயராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சமூக சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்த இலங்கையை சேர்ந்த கரீமா மரிக்கார் அவர்கள் லண்டனிலுள்ள பல தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் குறிப்பிடத்தக்கவிடயமாக்கும்.

இலங்கையர்களிடம் மாத்திரமின்றி மேற்கு ஹாரே மக்கள் மத்தியிலும் பிரபல்யமடைந்த ஒருவராக கரீமா மரிக்கார் காணப்படுகின்றார். அவரது பதவி பிரமாண நிகழ்வில் லண்டனில் வாழும் பெருமளவு இலங்கையர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஹாரோ நகர மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் மூன்று பிள்ளைகளை வளர்க்கும் தனது தாய் என்ற ரீதியிலும் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து பெருமை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் பிறந்து வளர்ந்த கரீமா, கண்டி மகளிர் பாடசாலையின் பழைய மாணவியாகும். பின்னர் 28 வருடங்களாக லண்டன் ஹாரோ பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார்.

கடந்த காலங்களில் ஹாரோ நகர சபையின் லேபர் கட்சி உறுப்பினராக கரீமா பாரிய சேவையை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.