செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசலிலும் பதற்றம்!

கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசலிலும் பதற்றம்!

0 minutes read

அம்பாறை மற்றும் கண்டி இடம்பெற்ற  அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்தத இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

கிளிநொச்சி நகரில்  உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியிலும் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 வது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதி இவ் பாதுகாப்பு இன்று  முதல் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியின் கரைச்சிப் பகுதில் அமைந்துள்ள இவ் ஐந்து பள்ளிவாசல்களையும் கரைச்சி பிரதேசசெயலாக பிரிவில்  உள்ள 249  முஸ்லீம் குடும்பங்கள் வழிபாட்டிற்காக பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.