இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று, இன்று மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தன.
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல இடங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன், பேரணியின் இறுதியில் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி கையொப்பங்களும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
