மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அனைத்துலக மக்களின் தொழிலாளர் உடைய உரிமைகளை மேன்படுத்துக்காக என்னும் கருப்பொருளில் உலக தொழிலாளர்கள் தின ஊர்வலம் யாழ்.பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மைதானத்தில் இருந்து ஆரம்பமாகியது.
இந்நிகழ்வு மக்கள் விடுதலையின் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்கா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜே.வி.பி.யின் தலைவர்களுடன் கைகொடுத்து இன்முகத்துடன் அவர்களை வரவேற்றதுடன் அவர்களுடன் இணைந்து பேரணியில் கலந்துகொண்டார்.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலைசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு முழுமையான ஒத்துழைப்பை ஜே.வி.பி வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊர்வலமானது யாழ்.பொஸ்கோ ஆரம்ப பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி நல்லூர் கோயில், யாழ்.வைத்தியசாலை வீதியுடாக யாழ் மாநகர பிரதான மைதானத்தை சென்றடைந்து அங்கு விசேட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் யாழ்.பல்கலைகழக தொழிற்சங்கத்தினர், அனைத்துலக தொழிலாளர்கள் சங்கம், மின்சார சபையினர், அரச ஊழியர்கள், ஓய்வூதிய சங்கம், மீனவ சம்மேளனம், கைதிகளில் அமைப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
