அகதிகளாக 805 பேர் இலங்கையில் தங்கியுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களைத் தவிர மேலும் 637 பேர் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் பிரஜைகள் எனவும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வீசா மற்றும் எல்லைப்புற நிர்வாகி சமிந்த ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் ஏதிலி தொடர்பான ஆணையாளரின் அறிக்கையின் படி, இந்த ஆண்டின் மார்ச் 31ஆம் திகதி வரையில், இலங்கையில் 805 பேர் உள்ளனர்.
பாகிஸ்தான் பிரஜைகளே அதிகளவில் உள்ளனர். அவர்களைத் தவிர, மியன்மார், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
