6
புதிய அமர்வுக்காக பாராளுமன்ற வளாகத்திற்கு வருகைத்தந்த ஜனாதிபதிக்கு 21 மரியாதை வேட்டுக்கள் சகிதம் இராணுவ அணிவகுப்புடன் மகத்தான வரவேற்கப்பட்டது.
இலங்கை பாராளுமன்றத்தின் புதிய அமர்வு இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானியில் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்போது ஜனாதிபதியால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையும் நிகழ்த்தப்பட்டது.




