கிளிநொச்சியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று இரவு பளைப் பகுதியில் வாகனத்தில் இரகசியமான முறையில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு கிலோகிராம் ஹெரோயின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் இன்று (13.05.2018) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாக பளைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
