9

அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று அலரி மாளிகையில் இடம் பெற்றுள்ளது.
பிரதமருடனான இந்த சந்திப்பில் கேரோல் சீ போட்டர், மேக் தொன்பரி, விக்கி ஹட்ஸ்லர் குய்ட்டர் மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதர் அக்குல் கேஷாப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அபிவிருத்தி பணிகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பாக இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.