செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 20ம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இருப்போம்!

20ம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இருப்போம்!

0 minutes read


இலங்கையின் 20ம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக ஜே வி பி முன்வைத்துள்ள செயற்பட ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தராஜபக்ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வது உள்ளிட்ட சரத்துகள் அடங்கிய இந்த சட்டமூலத்தை, ஜே வி பி கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளித்தது. இது குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆராய்ந்த ஒன்றிணைந்த எதிரணி, அதற்கு எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயர் பதவிக்கு ஒன்றிணைந்த எதிரணியின் சார்பில் ஒருவரை பரிந்துரைக்கவும் அதுதொடர்பில் சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாற்று அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.