வவுனியாவில் நேற்று முந்தினம் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பு பொலிசாரால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வவுனியாவில் நேற்று முந்தினம் இரவு இடண்டு மணிளவில் வீடு புகுந்து கடத்திச் செல்லப்பட்ட 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட வள்ளிபுனம் பகுதியில் இருப்பதாக கேப்பாபுலவு விமானப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் தெரிவித்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட வள்ளிபுனம் பகுதியில் குழந்தை இருப்பதாக கேப்பாபுலவு இலங்கை விமானப்படை ஸ்கொட்ரன் லீடர் கிமால விக்கிரமசிங்க கோப்ரல் எஸ் என் சாமில் எல் ஏ சி அன்றா கன்னதிகே சாயன்ட் ரவுஸ்டீன் ஆகியோருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து இவர்களுடன்
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் டி சந்ரபால தலைமையில் உ பொ ப பண்டார உ பொ ப அல்விஸ் பொலிஸ் அதிகாரிகளான (22154) சந்ரகுமார (71504)சேனாநாயக்க (48759) கமகே டபிள்யு எஸ் ஜ அபேசிங்க (366190)தமிந்த (7525)கமல்ராஜ் (86414)தேசப்பிரிய உள்ளிட்ட அணியினர் சென்று குழந்தையையும் இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர்
மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்ட குழந்தை மாலை 6 மணியளவில் வவுனியாவில் இருந்து வருகைதந்த குழந்தையில் தாய் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுக்கவுள்ளனர்
