வரட்சியான காலநிலை காணப்படும் பிரதேசங்களுக்கு மற்றும் மின்உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு செயற்கை மழையினை பெற்றுக்கொள்வதற்காக சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைக்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.
குறித்த அமைச்சரவை பத்திரம் அமைச்சர் தயா கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்படி , சீனாவின் நெங்ஜிங் பல்கலைக்கழகம் மற்றும் முதன்மை கைத்தொழில் அமைச்சின் தலையீட்டில் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
