யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல் திணைக்களத்தை முற்றுகையிட்டு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று (08) காலை போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் உள்ள கடற்தொழில் நீரியல் திணைக்களத்தை முற்றுகையிட்டே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்குமருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகஅப்பகுதியில் தங்கியிருந்து வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை முற்றாகதடைசெய்யுமாறு வலியுறுத்தி உள்ளூர் மீனவர்களால் தொடர்ச்சியாக போராட்டங்கள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தென்னிலங்கை மீனவர்களால் முன்னெடுக்கப்படும் கடலட்டை பிடிக்கும் தொழிலை உடனடியாகதடுத்து நிறுத்தி அவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றுமாறுஆர்பாட்டக்காரர்கள் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளனர்;
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாணசபை உறுப்பினர்சந்திரலிங்கம் சுகிர்தன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில்கலந்துகொண்டுள்ளனர்.
