9
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய கோணேஸ்வரன் நிதர்ஸன் என்ற இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த மரணம் தொடர்பில் கொழும்பு மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
