யாழ்ப்பாணம் தெல்லிப்பளை, மல்லாகம் சந்தியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர் மல்லாகம் குளமங்கால் பகுதியில் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது மக்கள் வீதிகளை மறித்து போராட்டம் மேற்கொள்வதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ். மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜா சுதர்சன் என்ற 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சகாய மாதா ஆலயத்தின் பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலயத்தின் முன்பாக இன்று (17) மாலை சுமார் 6.30 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றதுள்ளது.
அந்த சம்பவத்தினைக் கட்டுப்படுத்த முற்பட்ட போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
