செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தாயாக உறவுகளை மீட்க எம்மோடு இணையுங்கள் உறவுகள் பகிரங்க அழைப்பு

தாயாக உறவுகளை மீட்க எம்மோடு இணையுங்கள் உறவுகள் பகிரங்க அழைப்பு

1 minutes read

 

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்காக கடந்த வருடம் பங்குனி மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து போராட்டத்தை தொடங்கிய மக்களது போராட்டம் எந்த தீர்வுக்களுமின்றி இன்று (16) 498 ஆவது நாளாக இடம்பெற்றுவருகிறது

இந்நிலையில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்திய மக்கள் தமது போராட்டம் நாளை மறுதினம் (18) 500 ஆவது நாளை எட்டுவதாகவும் இதுவரை எமக்கான எந்த தீர்வும் கிடைக்கவில்லை எனவும் அரசு எமக்கு பதில் வழங்காது எனவும் இதனாலேயே தாம் ஜநா அமர்வில் சென்றும் தமது நிலைப்பாட்டை கூறி சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் கோரியதாகவும்

காணாமல் போனோர் அலுவலகம் எமக்கு எதையும் செய்யாது எனவும் அது அரசின் திணிப்பு எனவும் அதனாலையே தாம் அதனை எதிர்ப்பதாகவும் இறுதியாக எமது 500 ஆவது நாளில் பலமான கோரிக்கையாக எமது கோரிக்கையை எடுத்து கூறவே தாம் ஒன்றுகூடுவதாகவும் எனவே மதத்தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பும் எம்மோடு சேர்ந்து பலமான குரலாக எமது உறவுகளை மீட்க அனைவரும் ஒன்றுதிரண்டு எம்மோடு குரல்கொடுக்குமாறு பகிரங்க அழைப்புவிடுத்துள்ளனர்

இதேவேளை இன்று (16) இவர்களது போராட்டத்துக்கு மத தலைவர்கள் பலர் வருகைதந்து இவர்களுடைய நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்துகளை கேட்டறிந்தனர்
(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.