செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி தொடர்பில் பொலிஸாரினால் மூவர் கைது.

சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி தொடர்பில் பொலிஸாரினால் மூவர் கைது.

0 minutes read

 

சமூக வலைத்தளங்களில் வெளியான குழந்தைக்கு மதுபானம் கொடுக்கும் விதமான காணொளி தொடர்பில் உடனடியாக செயற்பட்ட மீகலாவ பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

மீகலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணன்கமுவ பகுதியில் உள்ள வீட்டிலேயே குறித்த சம்பவம் கடந்த 14 திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த காணொளியில் 1 வருடமும் 1 மாதமுமான வயதுடைய குழந்தைக்கே மதுபானம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் குழந்தையை அநுராதபுரம் நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையை கொடுமை படுத்திய குற்றம் தொடர்பில் குழந்தையின் தந்தை உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை இன்று (18) கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மீகலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.