இந்தியா திருப்பதிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை திருப்பதி ஏழுமலை ஆலையத்தில் வழிபாட்டை நடத்தியுள்ளார்.
அவருக்கு கோவில் முகத்துவாரத்தில் வரவேற்பு வழங்கப்பட்டு வழிபாடுகளின் பின்னர், ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிரதமர், இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கான தீர்வு காணப்பட்டுவருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு உறுப்புரிமை வழங்கப்படுவது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் வழங்கிய பிரதமர் அதற்கு சாதகமான வாய்ப்புக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டதாக இந்தியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் எதிர்வரும் திங்கட் கிழமை நடைபெறவுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது ஆய்வு செய்யப்படும் என்று கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளையதினம் கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
