செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் பல தாக்குதல் தொடர்பான நபர் கார் ஒன்றுடன் ஒருவர் கைது!

யாழில் பல தாக்குதல் தொடர்பான நபர் கார் ஒன்றுடன் ஒருவர் கைது!

0 minutes read

 

யாழ் மிருசுவில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் கார் ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது மேலும் இருவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மிருசுவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீதியில் சென்ற பொதுமகன் இருவரை மகிழுந்தில் மது போதையில் சென்ற மூவர் தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மகிழுந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மது போதையே தாக்குதலுக்கு காரணம் என காவல்துறை விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவில் பகுதியில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியல், எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.