வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் வசித்த கர்ப்பிணி பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அத்துடன், அதேபகுதியைச் சேர்ந்த கிளிநொச்சி பொறியியல் பீட மாணவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பட்டானிச்சூர் கிராமம் கடந்த இருதினங்களாக முடக்கப்பட்டிருந்ததுடன், குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பரிசோதனையின் அடிப்படையில் நேற்று மாலை கிடைக்கப் பெற்ற முடிவுகளின் அடிப்படையில் மேலும் 5 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.