September 22, 2023 2:48 am

தேர்தல் களம் சூடுபிடிப்பு! – கூட்டணிக்கான பேச்சுகள் தீவிரம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ள பிரதான கட்சிகள், கூட்டணி தொடர்பான பேச்சுகளையும் ஆரம்பித்துள்ளதால் குட்டித் தேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போது சுயாதீனமாகச் செயற்படும் அணிகள், ஒன்றாக சங்கமித்து தேர்தலை எதிர்கொள்வதற்குத் தற்போது கொள்கை மட்டத்திலான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

விமல் வீரவன்ச தலைமையிலான ‘உத்தர லங்கா சபாகய’, டலஸ் அழழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை, அநுர பிரியதர்சன யாப்பா அணி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவே பரந்தப்பட்ட கூட்டணிக்காகக் கைகோர்த்துள்ளன. சம்பிக்க ரணவக்கவின் 43 ஆம் படையணியையும் உள்வாங்குவதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

தேர்தலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக வெற்றிலைச் சின்னத்தில் எதிர்கொள்ள வேண்டும் எனவும், இதற்கு ஆதரவு தெரிவித்து மொட்டுக் கட்சி எம்.பிக்களில் சுமார் 15 பேர் வரை புதிய கூட்டணியில் இணையக்கூடும் எனவும் அரசியல் களத்தில் அரசல் புரசலாகக் கதை அடிபடுகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்