செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் விபத்தில் காயமடைந்தவர் நிமோனியா காய்ச்சலால் மரணம்!

யாழில் விபத்தில் காயமடைந்தவர் நிமோனியா காய்ச்சலால் மரணம்!

0 minutes read

விபத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

சுழிபுரத்தைச் சேர்ந்த செல்வரட்ணம் பாலச்சந்திரன் (வயது – 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் மோட்டார் வாகனத்தில் பயணித்த அவர் நாயுடன் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்குள்ளான நிலையில் நிமோனியா காய்ச்சல் மூலம் ஏற்பட்ட கிருமித் தொற்று பரவிய நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.