பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து 4 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை திருமண நிகழ்வுக்குச் செல்லவிருந்த வேளை தனது மகளைத் தயார் நிலையில் வைத்துவிட்டு சிறுமியின் தாய் தயாராகிக் கொண்டிருந்த போது மேற்படி சிறுமி வீட்டின் அருகாமையில் இருந்த ஆற்றில் தவறுதலாக வீழ்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார் என்று கூறப்படுகின்றது.
பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சிறுமியைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சுமார் மூன்று மணித்தியாலங்களுக்குப் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீடகப்பட்ட சிறுமி கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த நான்கு வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.