கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தர்மபுரம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று திங்கட்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
அதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.