செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் வெப்பமண்டல புயலால்!

அமெரிக்காவில் வெப்பமண்டல புயலால்!

1 minutes read


உலகத்தில் எவ்வளவு பெரிய வல்லரசு நாடகயிருந்தாலும் இயற்கை தண்டித்ததுதான் ஆகும் அந்த வகையில் அமெரிக்காவில் ஆண்டு தோறும் புளோரிடா மாகாணத்தில் ஜூன் மாதம் புயல் சீசன் துவங்கும். இந்த ஆண்டு தற்போது ஆல்பர்டோ என்ற சூறாவளி புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. பனாமா நகரத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் பலத்த மழையை ஏற்படுத்தியுள்ளது.

ஆல்பர்டோ புயல் வடக்கு நோக்கி நகரும்போது வலுவடைந்து வருவதாகவும், வெள்ள அபாயம் ஏற்பட உள்ளதாகவும் மியாமி புயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் பெயரிடப்பட்ட முதல் புயல் ஆல்பர்டோ ஆகும். இந்த புயலின் மூலம் மேற்கு ஜியார்ஜியா பகுதிகளில் சுமார் 30 செ.மீ அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் 60 முதல் 120 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.