உலகம் முழுவதும் பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு சிங்கப்பூரின் சென்டேசாவில் உள்ள சங்கிரி லா விருந்தகத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு குறித்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சந்தேகம் வெளியிடப்பட்டது. எனினும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து இந்த சந்திப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எதிர்வரும் 12ஆம் திகதி சிங்கப்பூர் நேரப்படி 9 மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
